"டௌன் டூ எர்த்'
25 ஆண்டுகளுக்கு முன்னால் அவரைச் சந்திக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றா? இரண்டா?


25 ஆண்டுகளுக்கு முன்னால் அவரைச் சந்திக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை நடைபெற்ற சம்பவங்கள் ஒன்றா? இரண்டா?
மனதில்பட்டதை பேசக் கூடியவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர், சுதாங்கன்.
இன்றைக்கு மை.பா. நாராயணன் என்று பலபேருக்குத் தெரிகிறதென்றால் அதற்குப் பிள்ளையார்சுழி போட்டவர், அவர்தான். பெரிய பெரியஅரசியல் தலைவர்களைப் பேட்டி எடுக்கவும் என்னைஅனுப்பி வைப்பார். அவரிடம் எனக்குப் பிடித்தது அவரின் கருணை உள்ளமும் ஈரமான இதயமும்தான். அடுத்தவன் பசித்திருக்க அவர் ஒருநாளும் தனியாகச் சாப்பிட்டு நான் பார்த்தது கிடையாது!
மறைந்த பெரியவர் பத்திரிகையாளர் சோலையில் ஆரம்பித்து கலைஞர் கருணாநிதி, வை.கோ. போன்றவர்களிடமும் எனக்கு அறிமுகம் ஏற்படுத்தித் தந்தவர், சுதாங்கன். "நிரம்பப்படி. பலஆளுமைகளின் பேச்சைக் கேள்' என்று என்னை ஊக்கப்படுத்தியவர், அவர்.
"தமிழன்எக்ஸ்பிரஸ்' அலுவலகத்தில் வை.கோ., கலைஞர் கருணாநிதி ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பேசுவதைப்போல் பேசிக் காண்பிப்பேன். சிரித்துக் கொண்டே கேட்டு ரசிப்பார். பத்திரிகை உலகத்தில் அவரை எம்.ஜி.ஆர். என்றுதான் பலரும் அழைப்பார்கள். வள்ளல்தன்மையும் மற்றவருக்கு உதவும் குணமும் அவரிடம்அதிகம் இருந்ததை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். பல எழுத்தாளர்களுக்குப் பத்திரிகையில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவர்களின் களநிலவரம் தெரிந்து "செக்' கொடுத்து என்னைஅனுப்பிய நிகழ்வுகள் ஏராளம்.
என்னுடைய அரசியல் மற்றும் நாலாயிர திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகப் பேச்சுகளை விரும்பிக் கேட்டுவிட்டு தொலைபேசியில் பாராட்டிமகிழ்வார்.
வார்டு கவுன்சிலரில் ஆரம்பித்து வள்ளலார், சினிமாபாட்டு, ஆங்கிலநாவல் என எல்லாத் தளங்களிலும் களங்களிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்டவர் சுதாங்கன். டௌன் டூ எர்த் என்பார்களே அதற்கு மிகவும் சாலப் பொருத்தமானவர் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...