விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வித்தியாசமான கார்!

மலைகள், குன்றுகள், மேடு, பள்ளங்கள்,  காடுகளுக்கு எல்லாம் சென்று, அங்குள்ள காட்சிகளை ரசிப்பதற்குப் பலரும் விரும்புவார்கள்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 12:30 am

என்.ஜே.

மலைகள், குன்றுகள், மேடு, பள்ளங்கள்,  காடுகளுக்கு எல்லாம் சென்று, அங்குள்ள காட்சிகளை ரசிப்பதற்குப் பலரும் விரும்புவார்கள்.  காடுகள், விலங்குகள், பறவைகளை ஆராய்ச்சி  செய்பவர்கள்,  அவற்றைப் புகைப்படம் எடுக்க விரும்பும் புகைப்படக் கலைஞர்கள்  ஆகியோர் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.  ஆனால்   சாலை வசதிகள் இல்லையென்றால்,  அங்கே எல்லாராலும் போக முடியாது. 

மேடு, பள்ளங்கள், மலைப்பகுதிகள், ஒழுங்கான சாலையில்லாத பகுதிகளில் எல்லாம் செல்லும் ஸ்வின்கார்  இ- ஸ்பைடர் என்ற மின்சாரத்தில் இயங்கும் காரை பிரான்சு நாட்டின் மெகான்ராக் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த கார் எப்படிப்பட்ட மேடுபள்ளங்களில் சென்றாலும்  ஓட்டுநர் அமர்ந்திருக்கும் இருக்கை கிடைமட்ட நிலையில் இருக்கும்படி இந்தக் கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  காரின் நான்கு சக்கரங்களும்  மேடு பள்ளத்திற்குத் தகுந்தாற்போல்  உயரம் அதிகமாகியோ, குறைந்தோ, சரிந்தோ மாறிவிடுகின்றன.  இதனால் ஓட்டுநர் எந்தவிதமான பயமுமில்லாமல், பாதுகாப்பாக இந்த காரில் செல்ல முடிகிறது. 

சிலந்தியின் கால்களைப் போல இதன் சக்கரங்கள் இயங்குவதால் இதற்கு ஸ்வின்கார் இ- ஸ்பைடர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

ஒருமுறை சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் ஓடும் இந்த கார் மணிக்கு 18 மைல் வேகத்தில் குன்றுப் பகுதிகளில் செல்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.