பேல்பூரி
நீங்கள் தடுக்கிவிழும்போதுதூக்கிவிட யாருமே வரவில்லைஎன்றாலும்,நிமிர்ந்து நடக்கும்போதுதடுக்கிவிட...ஒருவராவது வருவார்... கவனமாக இருங்கள்.


(பென்னாகரம்-நாகமரை சாலையில் உள்ள ஊரின் பெயர்)
டீக்கடை
நரசிம்மன், தருமபுரி.
(சென்னை ஆவடி அருகே சென்ற ஒரு லாரியின் பின்புறத்தில்)
நீங்கள் தடுக்கிவிழும்போதுதூக்கிவிட யாருமே வரவில்லைஎன்றாலும்,
நிமிர்ந்து நடக்கும்போதுதடுக்கிவிட...
ஒருவராவது வருவார்... கவனமாக இருங்கள்.
எஸ்.வடிவு, சென்னை-53.
(கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடிக்கு அருகில் உள்ள ஒரு
கிராமத்தின் பெயர்)
கன்னித் தமிழ்நாடு
எஸ்.மங்கையர்கரசி,
நெய்வேலி.
(திருச்சி கே.கே.நகரில் வீட்டிலிருந்து வெளியில் செல்லும் கணவன், மனைவியிடம்)
""ஆபிஸில் இருந்து போன்வந்தால் வொர்க் ஃபிரம் ஹோம்...
அப்புறம் பேசுங்கன்னு சொல்லு''
""சரிங்க...''
""கடன்காரங்க யாரும் தேடி வந்தா... வொர்க் ஃபிரம் ஆபிஸ்ன்னு சொல்லு... ஜாக்கிரதை...
மாத்திச் சொல்லிடாதே''
அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி -21.
(சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கணவன்-மனைவி )
""பெட்ரோல் டீசல் விலை ஏறிப்போச்சு...
வண்டியை ஓரங்கட்டி விட்டு நடந்து போங்க.
இல்லைன்னா சைக்கிள்ல போங்க''
""சரி, நீ சொல்றதை நான் கேட்கிறேன். நான்
சொல்றதை நீ கேளு. சமையல்கேஸ் விலை
ஏறிப்போச்சு. கேஸ் அடுப்பை ஓரமா வச்சுட்டு விறகு அடுப்புல இனிமே சமையல் பண்ணு''
பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.
எல்லாரும் தம்மை விட்டுவிட்டு வேறு யார் யாரையோ சீர்திருத்த முயல்கிறார்கள்.
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
""ஐயா, என் பெயர் முருகன். தங்களிடம் இசை கற்க ஆசைப்படுகிறேன். கற்றுக் கொடுப்பீர்களா?'' என்றான் முருகன்.
""அது தானே என் தொழில்? நிச்சயம் கற்றுக் கொடுக்கிறேன்'' என்றார் குருநாதர்.
""11 மாதத்துக்கு என்ன கட்டணம் ஐயா?''
""முதல் மாதம் ஆயிரம் ரூபாய் தர வேண்டும். அடுத்த மாதம் 900 ரூபாய் தர வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் நூறு ரூபாய் குறைந்து கொண்டே போகும்''என்றார் குருநாதர்.
முருகன் சட்டென்று கிளம்பினான்.
""ஏன் தம்பி கிளம்பிவிட்டாய்?'' என்று கேட்டார் குருநாதர்.
""பத்து மாதம் கழித்து வரலாம் என நினைக்கிறேன் குருவே''என்றான் முருகன்.
அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
முதியவருடன் தானும் சேர்ந்து நடக்கிறது...
கைத்தடி.
ஏ.நாகராஜன், பம்மல்.
செல்லிடப் பேசி நமது வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. அதிலும் காடுகளில் சுற்றித் திரிந்து வன விலங்குகளைப் புகைப்படம், விடியோ எடுக்க விரும்புபவர்களுக்கு செல்லிடப் பேசி, ஐ போன் போன்றவை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
ஆனால் இவற்றை சார்ஜ் செய்ய எல்லா இடங்களிலும் மின்சார வசதி இருக்காது. பவர் பேங்க் என்றழைக்கப்படக் கூடிய கருவி இருந்தாலும் அதை சார்ஜ் செய்யவும் மின்சாரம் வேண்டுமே?
இந்தப் பிரச்னையை சமாளிக்கும்விதமாக இப்போது சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கக் கூடிய நிறைய பவர்பேங்குகள் வந்துவிட்டன.
ஒரே நேரத்தில் நான்கைந்து செல்லிடப் பேசி, ஐ போன்களை இந்த சூரிய ஒளி பவர் பேங்குகளின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். திடீரென மழை பிடித்துக் கொண்டால் அதனால் பாதிக்கப்படாத வகையில் வாட்டர் ஃபுரூப் பவர் பேங்குகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.
தொலைதூரங்களுக்கு இந்த பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது கடினம் என்பதால், நான்காக மடித்து வைத்துக் கொள்ளக் கூடிய பவர் பேங்குகளும் தயாரிக்கப்படுகின்றன. சூரிய ஒளி பவர்பேங்க் கையில் இருந்தால், செல்லிடப் பேசியில் மின்சாரம் தீர்ந்துவிடுமே என்று யாரும் இனி கவலைப்பட வேண்டியதில்லை.
என்.ஜே.,
சென்னை-58.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...