தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி...

 ""விடியற்காலைல வாட்ஸ் அப்பில் என்ன மெசேஜ் வருது?'' ""முட்டை  போட்டாச்சுன்னு கோழி அனுப்புது'' 

News image
Updated On :24 அக்டோபர் 2021, 12:30 am

DIN

 ""விடியற்காலைல வாட்ஸ் அப்பில் என்ன மெசேஜ் வருது?''
 ""முட்டை  போட்டாச்சுன்னு கோழி அனுப்புது'' 

 ஏ. நாகராஜன்,
பம்மல். 

""சின்ன வயசுலேருந்தே அம்மா - அப்பா அடிச்சு வளர்த்ததோட பலன் இப்பத்தாங்க தெரியிது''
 ""எப்படி  ?''
""இப்பல்லாம் பொண்டாட்டி அடிக்கும் போது கோபமே வர்றதில்லையே''

கணவன்: அரை மணி நேரமா நான் நாயா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்னடி அர்த்தம்? 
மனைவி: எனக்கு நாய் பாஷை தெரியலேன்னு அர்த்தம்ங்க...


""தாடி, மீசையோடு வந்த பிச்சைக்காரனைப் பார்த்துட்டு, சாமியார்னு நினைச்சு லேடீஸ் சில பேர் வணங்க ஆரம்பிச்சாங்க''
""அப்புறம்...?''
""சாமியாராவே மாறி, இப்ப நல்லா வசதியா இருக்கான்''

கணவன்: என் நண்பனை நம்ம வீட்டுக்கு சாப்பிட வரச் சொல்லியிருக்கேன்... 
மனைவி:   வீடு பாருங்க எவ்ளோ அலங்கோலமாக இருக்கு, பாத்திரம் கூட வெளக்கல, என்னால சமைக்க முடியாது.
கணவன்: பரவாயில்ல, அவன் கல்யாணம் பண்ற ஐடியால இருக்கான். கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்னு என்கிட்ட கேட்டான், வந்து பாத்துட்டுப் போடான்னு சொன்னேன் !

 எம் அசோக்ராஜா,  
அரவக்குறிச்சிப்பட்டி.

""வாழ்வுல உற்சாகம் பிறக்க ஒரு வழி சொல்லுங்க சாமி?''
""ஒரு குழந்தையைப் பெத்துக்கிட்டு, அதுக்கு  
"உற்சாகம்'ன்னு பேர் வச்சிடுங்க''

வி. ரேவதி,
தஞ்சை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.