தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி... 

""அந்தாளு கடன் கேட்கத்தான் வந்திருக்கான்னு தோணுதுங்க'' ""எப்படிச் சொல்ற?'' ""உங்களைப் பத்தி புகழ்ந்து பேசினாரே?''

News image
Updated On :31 அக்டோபர் 2021, 11:24 am

DIN

""அந்தாளு கடன் கேட்கத்தான் வந்திருக்கான்னு தோணுதுங்க''
 ""எப்படிச் சொல்ற?''
 ""உங்களைப் பத்தி புகழ்ந்து பேசினாரே?''

-வி. ரேவதி,
தஞ்சை. 

 ""ஒருத்தன் நல்லா இருந்தால் பார்த்து கண் திருஷ்டி போடவே கூடாது''
 ""என்ன பண்ணனும்?''
 ""வாயால் புலம்பிக் கொட்டிடணும்'' 

""பாதி கச்சேரியில் பாகவதர் ரவாதோசை 
ஒன்னுன்னு மைக்கில்ஏன் சொல்றார்?''
 ""சபா கேன்டீனுக்கு குரல் கொடுக்கிறார்.'' 

""பாதி ஷோவிலேயே மேஜிக் முடிந்து போச்சா? 
ஏன்?''
 ""மேஜிக் நிபுணர் மாயமாகி விட்டார்''

 ""உங்கள் வீட்டுக்கு வரநீர் வழிதான் இருக்கா? என்னய்யா சொல்றே?''
 ""ரெண்டுசாக்கடையைத்தாண்டி வரணும்னு சொல்றேன்''

""ஏன் ராமு... மாஸ்க் மாட்டிக்கிட்டு வாட்ஸ்அப் பாக்குறே?''
 ""எங்க வாட்ஸ்அப் க்ரூப் அட்மினுக்கு கரோனாவாம்''

- ஏ.நாகராஜன்,
பம்மல். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.