தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி...

ஓவியர் 1: ஒரு எழுத்து தவறிட்டதுக்கு அந்த ஆள் அப்படி கத்தறான்...ஓவியர் 2: என்ன எழுதச் சொன்னாங்க?  நீ என்ன எழுதின?ஓவியர் 1: TOLETன்னு எழுதச் சொன்னாங்க... நான் TOILETன்னு எழுதிட்டேன்

News image
Updated On :12 செப்டம்பர் 2021, 4:54 pm

DIN


ஓவியர் 1: ஒரு எழுத்து தவறிட்டதுக்கு அந்த ஆள் அப்படி கத்தறான்...
ஓவியர் 2: என்ன எழுதச் சொன்னாங்க?  நீ என்ன எழுதின?
ஓவியர் 1: TOLETன்னு எழுதச் சொன்னாங்க... நான் TOILETன்னு 
எழுதிட்டேன்

  - ப நரசிம்மன்,  
தருமபுரி.

"" சட்டத்தைக் கையில் எடுக்க  முடியல''
""ஏன்?''
""சட்ட புக் எல்லாம் ஒரே கனம்''

""கரோனாவும், உங்க மனைவியும் ஒன்றா... எப்படி?''
""இப்போ  எனக்கு உயிர் பயத்தைக் காட்டி பயமுறுத்தறதே,  இந்த இரண்டு பேர்தான்!''

வெ.இராம்குமார்,
வேலூர்-1.

""மேடையில் உங்க குரல் ஏன் ஓங்கி ஒலிக்கல?''
""மைக் ஆஃப் ஆயிடுச்சு''

""தலைவர் "வாக்'கு மாறாதவரா எப்படி? ''
""எப்பவும் ஒரே சாலையில் தான் நடைப்பயிற்சி மேற்கொள்வார், அதான்.''

அப்ரோஸ் பானு,
சென்னை.


""மொபைல் வழி லவ் பண்ணுவதில்  ஒரு வசதி''
""என்ன?''
""தேவை இல்லைன்னா டெலிட் பண்ணிடலாம்''

- ஏ. நாகராஜன்,
பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.