தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிரி... சிரி... 

""மாமனார் வீட்டுல என்னை வாழைப்பழம் மாதிரி நினைக்கிறாங்க!''"" வாழைப்பழம் மாதிரியா?''""ஆமா... சீப்பா  நினைக்கிறாங்க!''

News image
Updated On :26 செப்டம்பர் 2021, 12:30 am

DIN


""மாமனார் வீட்டுல என்னை வாழைப்பழம் மாதிரி நினைக்கிறாங்க!''
"" வாழைப்பழம் மாதிரியா?''
""ஆமா... சீப்பா  நினைக்கிறாங்க!''


""இந்த புத்தகத்தை முழுசா ஒரு தடவை   படிச்சீங்கன்னா போதும், உங்க கவலைகள்ல பாதி  தீர்ந்துடும்!''
""அப்ப, 2 தடவை படிச்சா, முழு கவலையும் தீர்ந்துடும்னு சொல்லு ?''

""உண்மை எப்போதும் கசக்கும்..''
""அப்ப  சுகர் பேஷண்ட்டுக்கு நல்லதுன்னு சொல்லுங்க?'' 


""நாய் ஜாக்கிரதைன்னு இருந்த போர்டுல நாய்கள்
ஜாக்கிரதைன்னு மாத்திருக்
காங்களே, புதுசா நாய் எதுவும் வாங்கிருக்காங்களா?''
""இல்ல ;  பழைய நாய்தான் 3 குட்டி போட்டிருக்காம்!''

""நான் சொல்ற கடைல போய் என் பெயரைச் சொல்லு''
 ""என்ன செய்வான்?''
 ""விலையைக்  கொஞ்சம் கூடச்  சொல்வான்''

- ஏ.நாகராஜன், 
பம்மல். 

""நீ தான் எந்த ஊருக்கும் போகலையே, பிறகு எதுக்கு மதுரைக்குப்  போக வழி கேக்குறே ?''
""போகாத ஊருக்கு நீ நல்லா வழி சொல்லுவேன்னு எல்லாரும் சொன்னாங்க... அதான்''

-வி. ரேவதி, 
தஞ்சை.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.