யாரும் எதிர்பாராத நிலையில் சூர்யா - சிறுத்தை சிவாவின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.
சூர்யாவின் "சூரரைப் போற்று' பூஜை நிகழ்ந்த வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவுக்குச் சொந்தமான இடத்தில்தான் "சூர்யா 42' படத்தின் பூஜையும் நடந்தது. ஜோதிகாவின் படப் பூஜைகளும் இங்கேதான் நிகழும். இந்தப் படத்தைத் தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் மற்றும் தமிழின் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடிக்கிறார். முதன்முறையாகத் தமிழுக்கு வருகிறார்.
----------------------------------------------------
அஞ்சலி கிட்டத்தட்டச் சென்னையை விட்டுவிட்டு ஹைதராபாத்தில் வீடு வாங்கிக் கொண்டு செட்டிலாகிவிட்டார். இங்கே அவரைப் பற்றி கிசுகிசுக்கள் பல பரவி வந்தாலும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லையாம். இதனிடையே ஆன்மிகப் பயணமாக, இமயமலைக்கும் சென்று வந்திருக்கிறார். மனதளவில் எப்போது சோர்வு தட்டினாலும் உடனே அவர் போன் செய்து பேசுவது இயக்குநர் ராமிடம் தானாம்.
----------------------------------------------------
இனி தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் டொவினோ தாமஸூடன் நடித்த "வாஷி', தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த "சர்க்காரு வாரி பாதா' ஆகிய படங்கள் ரிலீஸþக்கு வெயிட்டிங். தவிர, தெலுங்கில் சிரஞ்சீவி, நானியின் படங்கள் மட்டுமே கைவசம் வைத்திருக்கும் கீர்த்தி, தமிழில் உதயநிதியின் "மாமன்னன்' படம் தவிர, ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.
----------------------------------------------------
தற்போதைக்கு ஹிந்தி, தெலுங்கில் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் சமந்தா. அதற்காகவே மூன்று கதை கேட்டு இந்தியில் ஓகே சொல்லி வைத்திருக்கிறார். கணிசமான சம்பளம் கொடுத்தால் வெப்சீரிஸ்க்கும் ஒப்புக்கொள்ள ரெடியாகி விட்டார். அதனால் ஹைதராபாத்திலும் மும்பையிலும் இரண்டு பிளாட்களை வாங்கி போடத் தீர்மானித்து விட்டதால் அவரது நண்பர்கள் தீவிரமாக இடம் தேடுகிறார்கள். பல்லாவரம் சமந்தா இனி மும்பை சமந்தாதான் என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!

ரெட்டியாா்பட்டியில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவில்பட்டி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: கனிமொழி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


