பேல் பூரி
''மச்சி. கல்யாணத்துக்குப் பிறகு வாழ்க்கையே மாறிடிச்சி?''''ஆமாண்டா. நீ சூப்பரா சமைக்க ஆரம்பிச்சுட்டே..!''


(நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி அருகேயுள்ள ஜவுளிக்கடையின் பெயர்)
''பேட் பாய்''
-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
(தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட சாலியமங்கலத்துக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
''கோடுகிழி''
-பொன்னியின் செல்வன்,
தஞ்சாவூர்.
(சங்கரன்கோவில் அருகேயுள்ள ஊரின் பெயர்)
''தலைவன்கோட்டை''
-கே.சுபாக்கனி,
மேலகிருஷ்ணன்புதூர்.
(திருச்சியில் உள்ள ஒரு காய்கறி கடையில்..)
''ஏம்பா? நேத்திக்கு வாங்கிட்டு போன பனங்கிழங்கு ஒரே கசப்பு!''
''பேரம் பேசி தானே வாங்கிட்டு போனீங்க?''
''ஆமாம். அதனால் என்ன?''
''நான் சொன்ன விலைக்கே வாங்கிட்டு போய் இருந்தீங்கன்னா. கசப்பாய் இருந்திருக்காதுன்னு சொல்ல வந்தேன்''
-அ.சுஹைல்ரஹ்மான்,
திருச்சி.
(சென்னை சென்ட்ரலில் இருவர்)
''மச்சி. கல்யாணத்துக்குப் பிறகு வாழ்க்கையே மாறிடிச்சி?''
''ஆமாண்டா. நீ சூப்பரா சமைக்க ஆரம்பிச்சுட்டே..!''
-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
(திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருவர் பேசிக் கொண்டது)
''இந்தத் தடவை மழை, தண்ணீர் எப்படி மாப்ளே''
''அந்த வயத்தெரிச்சலை ஏன் கேக்கறீங்க?''
''போன வருஷம் கொட்டோ கொட்டுன்னு கொட்டி தண்ணீ காட்டிச்சி. இந்தத் தடவை சேலை நனையக் கூட பெய்யாமல் தண்ணீ காட்டிடிச்சி மச்சான்''
-கோ.வினோத்,
திருநெல்வேலி.
கண்களைத் திறந்துகொள்.
ஆராயாமல் ஏற்பது கண்மூடித்தனம்.
-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
அந்தக் குக்கிராமத்தில், விவசாயி வசந்துக்கு வாழ்க்கைப்பட்டாள் பட்டணத்துப் பட்டதாரிப் பெண் ரேகா. ஜாதகப் பொருத்தம் பிரச்னையால் நீண்ட நாளாகத் திருமணம் தள்ளி வந்ததால், படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் அடியெடுத்துவைத்தாள் ரேகா.மாமியார் கமலாவோ பள்ளிக்கூடம் பக்கம் போனதே இல்லையென்றாலும், பிடிவாதக் குணம் கொண்டு மருமகளை அடக்கி வந்தார். வசந்தும் செய்வதறியாது திகைத்தான். ரேகாவும் தனது மாமியாருக்கு சரியான நேரத்தில் பாடம் புகட்ட நினைத்தார்.
அன்றொரு நாள், 'பழைய வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குறோம்' என்று வேனில் கூவிக் கொண்டு வந்தார் வியாபாரி. இதைக்கேட்ட கமலா, பழைய பொருள்களை விற்று பணமாக்கினார். இதற்காக, ரேகாவை வேலை வாங்கிவிட்டார்.
இதைக் கண்ட ரேகாவோ, அந்தப் பழைய பொருள் வாங்கும் வியாபாரியை தனியே அழைத்து ரூ.200 கொடுத்து, ஒரு தாளில் எழுதிக் கொடுத்து, மறுநாள் வந்து வாசிக்கச் சொன்னார்.
இதன்படி வியாபாரி கமலாவின் வீட்டருகே வந்து, ''பத்தாயிரம் ரூபாய்க்கு படிக்காத கிழவி வாங்குறோம். அடங்காத மாமியாரை வாங்குறோம்.'' என்று கூவினார்.
இதைக்கேட்ட கமலா தலைகுனிந்தபடி ரேகாவைப் பார்த்து பதுங்கியவாறு, வீட்டின் பின்புறம் சென்றுவிட்டார்.
அன்றிலிருந்து கமலாவும் திருந்திவிட்டார்.
-ச.சுப்புரெத்தினம்,
மயிலாடுதுறை.
எதிரியை பேசவிட்டு கவனிக்கணும்.
துரோகியை பேச விடாம கவனிக்கணும்.
-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.
கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் 'பாஸ்வேர்ட்' எனப்படும் கடவுச்சொல், தகவல் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நான்கு எழுத்துகளில் இருந்த கடவுச்சொற்கள் காலப்போக்கில் நீண்டுக் கொண்டே போயின. அதிலும் சிறப்பு எழுத்துகளை உள்ளடக்கிய கடவுச் சொல் கட்டாயம் என்ற சூழ்நிலைக்கு பயன்பாட்டாளர்கள் தள்ளப்பட்டனர்.
அப்படி பதிவிட்ட கடவுச்சொல்லை மறந்துவிடாமல் இருக்க பல முறை எழுதிவைத்தவர்களும், கடவுச்சொல்லை மறந்துவிட்டு குழம்பியவர்களும் ஏராளம். அந்த அளவுக்கு பல்வேறு கணக்குகளுக்கான கடவுச் சொற்களை தினசரி வாழ்வில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படி இருந்தும் கடவுச் சொல் திருடப்படுவது தொடர்ந்து வந்தது.
இந்த நிலையை மாற்ற கூகுள் நிறுவனம் பாஸ்கீஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பாஸ்கீஸ்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் க்ரோமை ஆண்ட்ராய்டு கைப்பேசியுடன் இணைத்துவிட்டு அதன் மூலம் முகபாவம், கைரேகை ஆகியவற்றை இணைத்துவிட்டால் போதும். கைப்பேசியின் உதவியுடன் கூகுள் க்ரோம் கணக்குகளுக்குள் நுழைந்து விடலாம்.
இது கடவுச் சொல் திருடப்படுவதைத் தடுக்கும். இந்த பாஸ்கீஸ் சேவை வின்டோஸ் 11, மேக் ஓஎஸ், ஆண்ட்ராய்டு உள்ளிட்டவற்றில் உள்ள கூகுள் க்ரோமில் பயன்படுத்தலாம். நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள பாஸ்வேர்டுகளை பாஸ்கீஸ்கள் மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...