தனக்கு நடந்த சைபர் தாக்குதல்கள் பற்றி பேசியிருக்கிறார் நடிகை பாவனா. ""சைபர் தாக்குதல் ஒரு தொழில் என்பதை இப்போது நான் அறிவேன். எனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் நிறையவே நடந்திருக்கின்றன.
இணையதளம் மூலம் ஒருவரை மிரட்டுவது, புகழுக்குக் களங்கம் விளைவிப்பது போன்றவை இன்று ஒரு தொழிலாகவே மாறி வருகிறது. இவரைத் தாக்க வேண்டும். அந்தப் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டும் என்று ஆட்களை அமர்த்தி பணத்தைச் செலவழித்து வருகின்றனர்.
படத்தில் நான் நடித்த கதாபாத்திரங்கள் மூலமே என்னை அறிந்தவர்கள் எனக்கு எதிரான வேலைகளைச் செய்தார்கள். எனது கடினமான காலகட்டத்தில் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறந்துவிடவில்லை.
மலையாள சினிமாவுக்கு மீண்டும் வரமாட்டேன் என்று நினைத்திருந்தேன். இப்போது திரும்பியிருக்கிறேன்'' என்றார் பாவனா.
---------------------------------------------------
தற்போது "கோல்டன் குளோப்' விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஆங்கிலம் அல்லாத பிற மொழிக்கான சிறந்த திரைப்படம் என்னும் பிரிவில் ராஜமெளலியின் " ஆர் ஆர் ஆர் ' திரைப்படம் நாமினேட்டாகியுள்ளது.
ஹாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு "ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தைத் தொடர்ந்து திரையிட்டுக் காட்டி வருகிறார்.
மேலும், ஆஸ்கர் நாமினேஷனுக்காக "ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தை மொத்தம் 15 பிரிவுகளில் விண்ணப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுதா கொங்கரா.
"துரோகி' படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, "இறுதிச்சுற்று', "சூரரைப் போற்று' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்.
தற்போது டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா "பயோபிக்' படமாக எடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும்.
---------------------------------------------------
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் மூலம், அதன் உரிமையாளர் சரவணன் மக்களிடம் பரிச்சயமானார். விளம்பரங்களில் வைரலான பிறகு, அவர் "தி லெஜண்ட்' என்ற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் படம் வெளியாகியிருந்தது.மக்களால் "லெஜண்ட் சரவணா' என்று அழைக்கப்படும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.
இந்த நிலையில் விளம்பரம், வெள்ளித்திரை வரிசையில் அடுத்ததாக அரசியல் என்ட்ரி குறித்தும் அவர் மனம் திறந்திருக்கிறார்.
""அடுத்த படத்துக்கான கதை தயாராகிவருகிறது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும். நான் அரசியலுக்கு வருவதை மக்களும், மகேசனும்தான் முடிவு செய்ய வேண்டும்.
மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


