இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திரைக் கதிர்

சிரஞ்சீவி - மோகன்ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம்  காட் ஃபாதர்.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

News image
Updated On :10 ஜூலை 2022, 11:36 am

தினமணி

சிரஞ்சீவி - மோகன்ராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம்  காட் ஃபாதர்.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசியலில் இருந்து விலகி விட்ட சிரஞ்சீவி மீண்டும் அரசியல் ஆரூடம் சொல்லுவது போல் இந்த கதைக் களம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சத்யஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பாக கேப்டன் மில்லர் என்ற படத்தை அறிவித்துள்ளது. "ராக்கி', "சாணி காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். 1930-40களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அடுத்த பான் இந்தியா படமாக உருவாகி வரும் படம் "பனாரஸ்'.  ஜெய தீர்த்தா எழுதி இயக்குகிறார்.   ஜையீத் கான்,  சோனல் மோன்டோரியோ நடிக்கின்றனர். காசி நகரத்தில் நடக்கும் காதல் கதை இது.  தமிழில் பாடல்களை பழனி பாரதி எழுதியிருக்கிறார்.  

தீபிகா படுகோன் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் "புரொஜெக்ட் கே' எனும் படத்தில் பிரபாஸின் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த தீபிகா படுகோனுக்குத் திடீரென இதயத்துடிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஓய்வு எடுத்து வருகிறார். 

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்குகிறார் தனுஷ். அவரது வுண்டர்பார் நிறுவனத்தின் கடைசி தயாரிப்பாக "மாரி 2' வெளியானது. அதற்கு முன் "பவர்பாண்டி', "விஐபி', "தங்கமகன்', "காலா', "வடசென்னை',  "அம்மா கணக்கு', "நானும் ரவுடிதான்' உட்படப் பல படங்களைத் தயாரித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.