பேல்பூரி
அரசு மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த கணவரிடம் ""உங்க ரத்த வகை என்ன?'' என்று கேட்டாள் மனைவி.


(சாத்தூர் அருகேயுள்ள ஓர் பேருந்து நிறுத்தத்தின் பெயர்)
வேண்டுதல் நிறுத்தம்
-இரா.சிவானந்தம்,
கோவில்பட்டி.
(கோவையில் ஒரு மினி லாரியின் பின்புறம் எழுதியிருந்தது)
பங்காளி பார்த்து வா.. இது பாயும் புலி
-ப.ஜெகநாதன்,
ஈரோடு.
(கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள ஒரு குக்கிராமத்தின் பெயர்)
வீரபயங்கரம்
-வி.சீனிவாசன்,
ஆவடி.
(கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருவர்)
""கரோனா மீண்டும் அதிகமாக வரும் போலிருக்கே..!''
""போன வருஷம் மாதிரி கடனை வாங்கிட்டு, வீட்டுல கவுந்து படுக்கலாமுன்னு பார்க்குறியா?''
-சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.
(புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே இரு பெண்கள்)
""இவ்ளோ பெரிய ஓட்டலா இருக்கு. ஆனா பாத்ரூம் வசதியில்லே.. வெளியிலேயேதான்னு சொல்றாங்க..?''
""பரவாயில்லை.. விடு. உணவுப் பொருள் விலையைப் பார்த்தா அதுக்கும் சார்ஜ் போட்டாலும் போடுவாங்க போலிருக்கே..!''
-வரதன்,
திருவாரூர்.
(திருச்சி கே.கே. நகரில் ஒரு வீட்டின் முன் தாயும் மகளும்)
""யூனிஃபார்ம்ல ஒண்ணு விட்டுட்டீயே? மம்மி!''
""இல்லையே? டை, ஷூ, பெல்ட், சாக்ஸ் எல்லாம்தா இருக்கு?''
""மாஸ்க்... மறந்துட்டீயே மம்மி..?''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
நினைவுகளுக்கு எடை இருந்தால்
நம்மால நடக்கவே முடியாது.
-பத்மா சாரதி,
தஞ்சாவூர்.
அரசு மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த கணவரிடம் ""உங்க ரத்த வகை என்ன?'' என்று கேட்டாள் மனைவி.
அதுக்குப் பதில் சொன்னார் கணவர்.
பதிலைக் கேட்டு திருப்தி அடையாத மனைவி, ""ஏங்க எனக்குத் தைரியம் சொல்லாதீங்க.. உங்க ரத்த வகை சொல்லுங்க.. ப்ளீஸ்'' என்று திரும்பத் திரும்பக் கேட்டார். மரணத்திலும் கணவர் கோபமுற்றாலும், தைரியத்துடன் மீண்டும் மீண்டும் அதையே சொன்னார். அங்கேயே இருவருக்கும் பேச்சுவார்த்தை நீண்டது. இருப்பினும், முடிவுக்கு வரவில்லை. இறுதியில்
கணவர் மரணமுற்றார்.
அவர் என்ன சொன்னார் தெரியுமா?
""பி. பாசிட்டிவ்''
-மோகனா அம்பி,
கும்பகோணம்.
எப்படிப்பட்ட வலியும்
ஒரு புன்னகையில் தீர்ந்துவிடுகிறது.
-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.
கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உலகம் முழுவதும் குளிர்சாதன இயந்திரம் - ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது.
தற்போது எந்தக் காலமாக இருந்தாலும் ஏ.சி. பயன்படுத்தப்பட வேண்டிய கட்டாயத்திலேயே சில கட்டட அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. பயணிக்கும் கார், பேருந்து, ரயில் என அனைத்திலும் ஏ.சி. சொகுசு
பயன்பாடாக மாறிவிட்டது. இதனால்
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், நிலக்கரி பயன்பாட்டால் கடினமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பெரும் பகுதி ஏ.சி. பயன்பாட்டுக்கே செலவாகி விடுகிறது.
இந்த நிலையை மாற்ற குவாஹாட்டி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் பயன்பாட்டில்லா ஏ.சி. தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
அனைவராலும் எளிதில் வாங்கக் கூடிய இந்த ரேடியோ ஆக்டிங் கூலர் தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இது ஏ.சி.க்களுக்கு மாற்றாக அமையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
வீட்டின் மேற்கூரையில் இந்த தொழில்நுட்பச் சாதனத்தை ஒட்டிவிட வேண்டும். வெளிப்புறத்தில் உள்ள இன்ப்ராரெட் ரேடியேஷன்ûஸ பயன்படுத்தி இந்த ரேடியோ
ஆக்டிவ் கூலர் தொழில்நுட்பம் இயங்குகிறது.
இதை இரவில் எளிதாக இயக்கிவிடலாம் என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்
பகலில் இயக்குவதுதான் பெரும் சவாலாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். அதை முறியடிக்கும் வகையில், சோலார் மற்றும் வெளிப்புறச் சூழலில் உள்ள ரேடியேஷன்களை பாலிமர்ஸ் பயன்பாட்டிலான ரேடியோ ஆக்டிவ் கூலர்களை உருவாக்கி உள்ளதாக குவாஹாட்டி ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இரவிலும், பகலிலும் இந்த மின்சாரம் பயன்பாடில்லா ரேடியோ ஆக்டிவ் கூலர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீடுகள், கார்கள் என அனைத்திலும் குளிர்
வசதி பெறலாம் என்கிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பு பெரிய அளவிலான கட்டடங்களில் சோதிக்கப்பட்டு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் உள்ள மின் தேவையை இது
பெருமளவில் குறைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...