சிரி... சிரி... 

""வெள்ளை கலர் யார் கேட்டது அதை ஏன் எடுத்து தர்றே?''""நீங்கதானே கொஞ்சம் கூட கலர் போகாத புடைவையா கேட்டீங்க..''
சிரி... சிரி... 


""வெள்ளை கலர் யார் கேட்டது அதை ஏன் எடுத்து தர்றே?''
""நீங்கதானே கொஞ்சம் கூட கலர் போகாத புடைவையா கேட்டீங்க..''

-கோ.யனிலா, 
சென்னை.


""ஏன்டா.. ராமு.. ஒரு வாரமா ஸ்கூலுக்கு வரல''
""மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்துட்டேன் சார்''
""மொட்டை மாடியிலிருந்து கீழே விழ ஒரு வாரம் ஆச்சா உனக்கு?''

--கே. இந்து குமரப்பன், 
விழுப்புரம்.

""அடிக்கிற ஆளுக்கு பெயர் அடியாளா?''
""ஆமாம்''
""அப்போ.. முட்டுற ஆளுக்கு பெயர் முட்டாள்தானே''

-ச.அரசமதி, 
தேனி.

""தொடுகறிகளை எதுக்கு "போர்க்'கால குத்தியெடுத்து சாப்பிடுறே..!''
""ஒரு மாதத்துக்கு தொடுகறி எதுவும் கையில் படக்கூடாதுன்னு டாக்டர் எச்சரிச்சிருக்காரு?''

-கோ.வினோத், 
திருநெல்வேலி.

""அந்தச் சிலந்தி கம்ப்யூட்டர்கிட்ட வந்து என்ன செய்யுது?''
""அது வெப்-சைட் ஆரம்பிக்கப் போகுதாம்!''

-ஆர்.ஜெயலட்சுமி, 
திருநெல்வேலி.

""சார்.. எங்க பாட்டி இறந்துட்டாங்க.. லீவு வேணும் சார்..''
""போன மாசம்தானே உங்க பாட்டி இறந்துட்டதா லீவு போட்ட..?''
""எங்க தாத்தா ரெண்டு கல்யாணம் பண்ணுனவரு சார்..''

-எஸ்.ராமதாஸ்,
புதுச்சேரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com