""55-ன்னு எழுதச் சொன்னேனே! 5 மட்டும்தான் எழுதியிருக்கே..?''
""ஆமாம் சார்... அதை இடப்பக்கம்
போடணுமா? வலப்பக்கம் போடணுமா?''
-அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.
""வீட்டு வேலை செய்ய என்ன பணம் கேட்கிறே!''
""வீட்டு வேலை செய்ய ரூ.2 ஆயிரம். மற்ற வீடுகளில் உங்க வீட்டு விஷயம் சொல்லாமல் இருக்க ரூ.2,500. மற்ற வீட்டு விஷயங்கள் உங்ககிட்ட சொல்ல ரூ.500.''
-டி.கே.சுகுமார்,
கோவை.
""இந்த ஏரியாவுல "எம்ஆர்பி' எவ்வளவு?''
""நிலம் விலை கேக்கறீங்களா...?''
""இல்லை.. வோட்டுக்கு என்ன விலைன்னு கேட்டேன்''
-சம்பத்குமாரி,
பொன்மலை.
""ஜப்பானில் இருக்கிறங்களுக்கு "கொசு'ன்னா என்னன்னே தெரியுதுடா''
""ஏன்.. அங்க கொசுவே கிடையாதா?''
""கொசுங்கிற தமிழ் வார்த்தைக்கு அவங்களுக்கு எப்படிடா அர்த்தம் தெரியும்...!''
-இரா.அருண்குமார்,
புதுச்சேரி.
""ஆமா.. உனக்கு இரட்டை குழந்தை பிறந்ததே இப்போ என்ன செய்யறாங்க...?''
""அவங்க இரண்டு பேரும் சேர்ந்து ஜெராக்ஸ் கடை வைச்சிருக்காங்க..''
-வண்ணை கணேசன்,
சென்னை.
""யானை பெரிசா..? பூனை பெரிசா..? நீ சொல்லு''
""அதுங்களோட பர்த் சர்டிபிகேட்டை கொடுங்க சார்.. பார்த்து சொல்றேன்..''
-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


