திரைக் கதிர் 

சிம்பு ரொம்பவும் மாறிவிட்டார். இதற்கு முன்னால் அவர் வீட்டில் கூட தங்குவதில்லை.
திரைக் கதிர் 
Updated on
1 min read


சிம்பு ரொம்பவும் மாறிவிட்டார். இதற்கு முன்னால் அவர் வீட்டில் கூட தங்குவதில்லை. ஹோட்டலில் தான் தங்கினார். வார இறுதி நாட்களில் மட்டும் வந்து அம்மா, அப்பாவை பார்த்துவிட்டுப் போவார். இப்போது ஹோட்டலிலிருந்து வீட்டிற்கு வந்து விட்டார். அப்பாவைக் கூடவே இருந்து கவனிக்கிறார். மெடிக்கல் செக்கப்பிற்கு அப்பாவை அழைத்துப் போவதும் அவர்தான். படப்பிடிப்புக்கு நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கிறார். அவரது நண்பர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இதுதான் இப்போது ஆச்சரியம். இதோடு அவர் கல்யாணமும் செய்து கொண்டு விட்டால் போதும் என நினைக்கிறார்கள் சிம்புவின் பெற்றோர்கள்.
 

--------------------------------------------------------------------------------
 

வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு ஓ.கே சொல்லிவிட்டார். நீண்ட நாள் இருந்த காதலும் கல்யாணத்தில் முடியாத காரணத்தால் அவரைக் கல்யாணத்திற்கு அணுக அவரது தங்கையின் பொருட்டு சம்மதம் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. அப்பா சரத்குமார் ஒரு பக்கம் மாப்பிள்ளை தேட, அம்மா சாயா மறுபக்கம் மாப்பிள்ளை தேடுகிறார்கள்.

--------------------------------------------------------------------------------

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸர் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10- ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். படத்தின் கதை கருவை எழுத்தாளர் மா.தொல்காப்பியன் எழுதியுள்ளார். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


--------------------------------------------------------------------------------


இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி - சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமான"காட்ஃபாதர்' பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. வெளியானதிலிருந்து இதுவரை 100 கோடியைத்தாண்டி உள்ளது. படத்துக்கு இப்போது ஹிந்தியிலும் வரவேற்பு எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகை வரை போட்டிக்கு படம் இல்லை என்பதால் வசூல் சாதனையில் புதிய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com