

கண்டது
(சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நின்றிருந்த காரில் எழுதியிருந்தது)
"நீதான் மன்னன் என்பதுபோல் நட! அல்லது யார் மன்னனாயிருந்தாலும் என்ன என்பதுபோல் நட!''
-சம்பத்குமாரி,
பொன்மலை.
(திருவாரூரில் ஆட்டோ ஒன்றில்)
"முடியாதவன்தான் அடுத்தவரைப் பற்றி விமர்சிப்பார்கள். முடிந்தவன்
அடுத்த நகர்வுகளைப் பற்றியே யோசிப்பான்''
- ஜி.அழகிரிவேல்,
ஒதியடிக்காடு.
(கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளஓர் கிராமத்தின் பெயர்)
"பூவத்தி''
-மு.மதனகோபால்,
ஒசூர்.
கேட்டது
(திருவாரூர் கூட்டுறவு நகரில் இரு பெண்கள்)
""என்னக்கா.. திடீர்னு குளோஸ்லுக் ஜாக்கெட் போடுறே..?''
""நகைகள் அடமானத்துக்கு போச்சு! அதான் இப்படி''
-மு.தனகோபாலன்,
திருவாரூர்.
(திருநெல்வேலி பேருந்து நிலையத்தில்இருவர் பேசிக்கொண்டது)
""எங்கேடா போயிட்டு வர்றே?''
""ரீசார்ஜ் பண்ண..!''
""செல்போனுக்கா.. உனக்கா..!''
""ரெண்டுக்கும் சேர்த்துதான்''
-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
(புவனகிரியில் ஒரு பட்டு ஜவுளி விற்பனைக் கடையில்)
""சாருக்கு தண்ணி கொடுப்பா.. மேடம் நீங்க காப்பியா?, டீயா? என்ன சாப்பிடுறீங்க..''
""புரியுது சார்! எங்கே கவனிச்சா வேலை நடக்குமுன்னு சரியா பண்றீங்க..''
-பி.கவிதா,
தம்பரம்.
யோசிக்கிறாங்கப்பா!
தடுமாறும்போது தட்டிக் கொடுங்கள்!
தடம் மாறும்போது தட்டிக் கேளுங்கள்!!
-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.
மைக்ரோ கதை
துறவி ஒருவரிடம் சில பக்தர்கள் வந்து, ""நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி வர உள்ளோம். நீங்களும் வாருங்கள் எங்களோடு'' என்றனர். அதற்கு அவரோ, ""நீராடினால் என்ன கிடைக்கும்'' என்றார். ""நம் பாவங்கள் விலகி தூய்மை பெறுவோம்'' என்றனர் பக்தர்கள்.
உடனே துறவி எட்டிக்காய் ஒன்றை பக்தர்களிடம் கொடுத்து, ""நீங்கள் நீராடும் நதிகளில் இந்த எட்டிக்காயையும் நீராட்டுங்கள்'' என்றார்.
சில நாள்கள் கழித்து பக்தர்கள் துறவியிடம் வந்து, எட்டிக்காயை கொடுத்தனர். அப்போது துறவி, ""உங்கள் பாவம் விலகிவிட்டதா?'' என்றனர். அதற்கு அவர்களும் "'ஆம்'' என்றனர்.
பின்னர் துறவி எட்டிக்காயை பல துண்டுகளாக்கி, பக்தர்களிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். இதை சாப்பிட்ட பக்தர்கள் கசக்கிறது என்று தூக்கி எறிந்தனர்.
உடனே துறவி, ""புண்ணிய நதிகளில் நீராடியதால் தங்களின் பாவங்கள் விலகியதைப் போல, இந்த எட்டிக்காயின் கசப்பும் நீங்கியிருக்கும் என்று நினைத்தேன். இல்லை. நீராடுதல் புறத்தின் அழுக்கைப் போக்கும். அகத்தின் அழுக்கைப் போக்க, தீமையை விலக்கி நன்மையைப் பெருக்கி புண்ணியம் தேடுங்கள்'' என்றார்.
-தாமஸ் மனோகரன்,
புதுச்சேரி.
எஸ்எம்எஸ்
நல்லவர்கள் யாரும் உலகில் இல்லை.
நடித்துக் கொண்டிருக்கிறோம்.. அவ்வளவுதான்!
-மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.
அப்படீங்களா!
19-ஆம் நூற்றாண்டில் விமானம் உருவாக்கப்பட்டிருந்தாலும், பறக்கும் காரை செயலாக்கம் செய்வதற்கு 21-ஆம் நூற்றாண்டு வரை காத்திருக்கிறோம்.
வான்வெளியில் பாதுகாப்புக் காரணங்கள் ஒருபுறமாக இருந்தாலும், இருக்கும் இடத்தில் இருந்தே காரை பறக்க வைப்பதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.
விமானத்தைப்போல் ஓடுதளத்தில் வேகமாகச் சென்று பறக்கும் வகை கார்களை சிலர் கண்டுபிடித்திருந்தாலும், அவை நடைமுறைக்கு சாத்தியப்படுவதில்லை. விமானத்தைப்போல் அந்த வகை கார்களுக்கும் இறக்கைகள் தேவைப்
பட்டன.
தற்போது சாலையில் செல்லும் காராகவும், இருந்த இடத்தில் இருந்தே வானில் பறக்கக் கூடிய காராகவும் கலிபோர்னியாவைச் சேர்ந்த அலேப் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் பறக்கும் கார் சாலை மார்க்கமாக 220 மைல்களும், பறக்கும்போது 110 மைல்களும் செல்லும். இந்த வகையான கார்களை வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. 2025-இல் இவை வாடிக்கையாளர்களிடம் வழங்கப்படுகிறது.
காரின் மதிப்பு ரூ. 2.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப்புற சாலைகளுக்கு இந்தப் பறக்கும் கார் தீர்வாக அமையும் என்று கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!

அதிமுக கூட்டணியில் 3 தொகுதியை கேட்டுப் பெறுவோம்: பிவி. கதிரவன் நம்பிக்கை

தேர்தல்களும் நலத் திட்டங்களும்...

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

