""என்னம்மா... மெது வடை சிவப்பு கலர்ல இருக்கு?''
""மருதாணி வைச்சிருந்த கையோட போட்டுட்டேங்க!''
-ப.சோமசுந்தரம்,
சென்னை.
""போலீஸ பாத்து ஏன் ஒளியற...ஏதும் தப்பு தண்டா பண்ணிட்டியா...?''
""திருட்டு தொழில விட்டு நாலு வருசமாச்சு.. ஆனா இன்னும் மாமூல் கேக்கறாங்க...''
-அ.செந்தில்குமார்,
சூலூர்.
""எனக்கு ஒரு "கடி ஜோக்' தெரியும்டா''
""சொல்லு... பார்ப்போம்..''
""சொன்னா.. கேட்கத்தான் முடியும். பார்க்க முடியாதுப்பா..''
-வி.ரேவதி,
தஞ்சாவூர்.
""மாமா.. உங்க பொண்ணு கடுங்கோபக்காரியா இருக்கா! அவ கூட நான் எப்படி குடும்பம் நடத்துறது?''
""மாப்ளே.. அவ அம்மா கூட நான் குடும்பம் நடத்துற மாதிரி நடத்துங்க!''
-கு.அருணாசலம்,
தென்காசி.
""மிருகங்களில் பொய் பேசறது எது தெரியுமா?''
""கரடிதான்! அதனால்தான் சும்மா கரடிவிடாதேன்னு சொல்றது வழக்கம்''
-ஆர்.யோகமித்ரா,
சென்னை.
""மன்னா.. இளவரசர் தந்திரம் மிகுந்தவர்..''
""எப்படி சொல்றீங்க.. தளபதியாரே..''
""மந்திரிகளை அடுத்த மன்னர் என்று சொல்ல வைத்துவிட்டாரே..''
-பி.கவிதா,
சிதம்பரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகா்கோவிலை முன்மாதிரி தொகுதியாக்குவேன்: எம்.ஆா்.காந்தி

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை
அருமனை சந்திப்பில் பிரசாரத்தை நிறைவு செய்த எஸ்.விஜய்தரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


