மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பேல்பூரி

இலவசங்களைத் தேடாதீர்கள். அது இனிப்பான விஷம்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 12:30 am

DIN


கண்டது

(திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமத்தின் பெயர்)

"நல்லாண்பிள்ளை பெற்றாள்''

-உ.ராமநாதன்,
நாகர்கோவில்.

(திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

""காந்தாரி''

-கனக.கந்தசாமி,
முத்துப்பேட்டை.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரு ஊர் பெயர்கள்)

கற்றுவா, கருங்கல்

- அ.இரவீந்திரன்,
குஞ்சன்விளை.


கேட்டது

(கடலூர்- தேவனாம்பட்டினம் சில்வர் பீச்கடற்கரையில் காதலர்கள் பேசிக் கொண்டது)

""உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்''
""ஐ லவ் அனிமல்ஸ்''

-டிங்கர் ஆர்.குமார்,
சிதம்பரம்.

(பிச்சாவரம் படகு சவாரி செய்யும் இடத்தில்தம்பதி பேசிக் கொண்டது)

""நானும் எங்கம்மாவும் ஒரு படகுல வர்றோம். நீயும் பசங்கும் இன்னொரு படகுல வாங்க!''
""என்னங்க.. நான் தண்ணியில உங்க அம்மாவை தள்ளிடுவேன்னு பயப்படுறீங்களா?''

-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.

(நாகர்கோவில் பேருந்து நிலையத்தில்இருவர்)

""நானும் வந்ததில் இருந்து பார்க்கிறேன். பஸ்ஸூம் வரல. நீ பேசற "ரீல்'தான் கேட்டுகிட்டு இருக்கேன்? என்ன வேலை பார்க்கிறே?''
""தியேட்டரில் ஆபரேட்டரா இருக்கேன்.. சார்..!''

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

யோசிக்கிறாங்கப்பா!


""வீட்டின் பெயரோ "அன்னை இல்லம்';
அன்னை இருப்பதோ "முதியோர் இல்லம்'

-"குலசை' நஜ்முதீன்,
சென்னை.

மைக்ரோ கதை


சாப்ஃட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் குகன், குமரன் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் திருமணமாகவில்லை என்பதால், ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் 50-ஆவது மாடியில் தங்கியிருந்தனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. இருவரும் மாலை நேரத்தில் திரைப்படத்துக்குச் சென்றனர். அவர்கள் திரும்பிவரும்போது, இரவு 10 மணி.

பைக்கை கீழ்த்தளத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, "லிப்ட்' இருக்கும் இடத்துக்குச் சென்றனர்.

""மின் தூக்கி பழுதடைந்துள்ளது. இன்று மட்டும் மாடிப் படியைப் பயன்படுத்துங்கள்'' என்ற பதாகை தொங்கியது.

""போகும்போது நன்றாக இருந்தது. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே..!'' என்று இருவரும் நொந்துக் கொண்டே, திரைப்படத்தைப் பற்றி பேசிக் கொண்டு மாடிப்படிகளில் ஏறினர்.

தங்களது அறையைச் சென்றடைந்தவுடன், ""குமரா.. ரூம் சாவியைத் தா'' என்றான் குகன்.

""ரூம் சாவியா? அச்சச்சோ... அது பைக் கவருக்குள்ளே இருக்கே'' என்று தலை மீது கை வைத்துக் கொண்டார்.

-க.ச.பெத்தையன்,
திருப்பூரணிக்காடு.

எஸ்எம்எஸ்


இலவசங்களைத் தேடாதீர்கள்.
அது இனிப்பான விஷம்.

-சங்கீத.சரவணன்,
மயிலாடுதுறை.

அப்படீங்களா!


வாட்ஸ் ஆப் குழுத் தலைவர்களுக்கு (அட்மின்) கூடுதல் அதிகாரம் அளிக்கும் புதிய சேவையை அந்த நிறுவனம் அளித்துள்ளது.

வழக்கமாக, குழுவில் பதிவிடப்பட்ட தகவலை பதிவிட்டவரே தனக்கோ அல்லது பிறருக்கோ அழிக்க வேண்டுமென்றால் 2 நாள்கள் 12 மணி நேரம் வரையில் அவகாசம் உள்ளது. ஆனால் சில குழுக்களில் பதிவிடப்படும் சில அவதூறு தகவல்களை அழிக்க வேண்டுமென்றால் பதிவிட்டவரே அழித்தால்தான் அழியும் நிலை இருந்தது.

இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இதை மாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

தற்போது குழுவில் பிறர் பதிவிடும் தகவல்களை குழுவின் தலைவரே அனைவருக்கும் அழிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது தகவல் அழிக்கப்பட்டுள்ளது மட்டும் பிறருக்கு தெரியும்.

ட்விட்டர்: 16 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சமூக ஊடகமான ட்விட்டரில் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. பதிவிடப்பட்ட தகவலை திருத்தும் வசதியை ட்விட்டர் முதன் முறையாக அளித்துள்ளது. 280 எழுத்துகளை மட்டும் பதிவிட அனுமதிக்கும் ட்விட்டரில் பதிவிடப்படும் தகவல்கள் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப்பையே ஆட்டிப் படைத்தது. இதனால் ட்விட்டருக்கு எதிராக சொந்த சமூக ஊடக செயலியையே அவர் தொடங்கி உள்ளார். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமான ட்விட்டரில் பதிவிடப்படும் தகவலை திருத்தும் சேவை வழங்கப்பட்டுள்ளது. ஒரு தகவலை பதிவிட்ட 30 நிமிஷங்களில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும்.

இந்தத் தகவல் திருத்தப்பட்டது என்று தெரிவிக்கவும் செய்யும். அதுமட்டுமின்றி, முதலில் பதிவிட்ட தகவல் முதல் பல முறை திருத்தப்பட்ட தகவலையும் காணும் வகையில் இந்த புதிய சேவை அளிக்கப்பட்டுள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.