பேல்பூரி

""அவசரத்துக்கு மின்தூக்கியைப் பயன்படுத்துங்கள்.ஆரோக்கியத்துக்கு படிகட்டுகளைப் பயன்படுத்துங்கள்''
பேல்பூரி

கண்டது


(சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் "லிப்ட்' அருகே காணப்படும் வாசகம்)

""அவசரத்துக்கு மின்தூக்கியைப் பயன்படுத்துங்கள்.
ஆரோக்கியத்துக்கு படிகட்டுகளைப் பயன்படுத்துங்கள்''

-எஸ்.வடிவு,
புதுக்கோட்டை.

(தேனியில் ஒரு லாரியின் பின்புறமுள்ள வாசகம்)

எதிரிகளை பலி வாங்குவதைவிட புரிந்துகொள்வது மேல்.

-ச.அரசமதி,
தேனி.

(கடையநல்லூர் அருகே ஒரு கிராமத்தின் பெயர்)

""ஊர்மேலழகியான்''

-மல்லிகா அன்பழகன்,
சென்னை-78.

கேட்டது


(திருச்சியில் ஓர் ஓட்டலில் சப்ளையரும், பார்சல் வாங்க வந்தவரும் )

""என்ன சார்? "பார்சல்' கேட்டீங்க. சாப்பிட உட்கார்ந்துட்டீங்க..''
""பார்சல் கட்ட நீங்க எடுத்துக்கிற நேரத்தைப் பார்த்தால், அடுத்த 
சாப்பாட்டு வேளை வந்துடும் போலிருக்கே..?''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(திருநெல்வேலி இ.சேவை மையம் ஒன்றில்..)

""சாரிங்க.. உங்க ஆதார் அட்டையில செல்போன் நம்பரை இணைச்சாலும், பான் கார்டு கிடைக்காது. ஆதாரில் பிறந்த வருஷம்தான் இருக்கு. தேதி, மாதம் இல்லை.''

""எல்.ஐ.சி. பாலிசி பணம் கிளைய்ம் பண்ண பான் கார்டு தேவை. அதுக்கு ஆதாரில் செல்போன் எண் இணைக்கணும். நீங்க பிறந்த தேதி, மாசம், வருஷம், நாள், நட்சத்திரம், ராசி, டயம்... ஓரை எல்லாம் கேக்கறீங்க.. ஜாதகமாகக் கணிக்கப் போறீங்க...''

-கோ.வினோத்து,
கிருஷ்ணாபுரம்.

(மயிலாடுதுறை- கச்சேரி தெருவில் தம்பதிக்கு இடையே  உரையாடல்)

""என்னங்க! என்னை முதல் தடவையா பார்க்கும்போது ஒரு சர்ட், பேண்ட் போட்டிருந்தங்களே.. அது எங்கங்க?''
""அதுவா.. ராசியில்லேன்னு அதை எரிச்சிட்டேன்மா..''

-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!


பிடித்த மனிதரோடு சிரித்து பேசு! 
பிடிக்காத மனிதரோடு சிந்தித்து பேசு!

-ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

மைக்ரோ கதை


இஷ்டப்பட்டு செய்யும் பணிகள் 
எதுவும் கஷ்டமில்லை.

-இசை இலக்கியா,  
திருநெல்வேலி.

அப்படீங்களா!


பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க,  இரு சக்கர மின்சார வாகனப் பயன்பாட்டுக்கு மக்கள் மெல்ல மெல்ல மாறி வருகின்றனர். ஆனால், அதிக விலை, திடீர் பழுது, தீ விபத்து ஆகியவற்றால் பலர் அதை வாங்க முன்வருவதில்லை.  அதிலும், மின்சார இரு சக்கர வாகனங்களில் கனத்த பேட்டரிகளை கழட்டி, மீண்டும் தினசரி ரீசார்ஜ் செய்வதும் கடினமாக உள்ளது. 

இதுபோன்ற பிரச்னைகள் இல்லாதபடி உள்ள மின்சார சைக்கிள் பிரபலமாகி வருகின்றன. சைக்கிளை மிதிப்பதுபோல் இயக்கினால் போதும். அதில் உள்ள பேட்டரி சைக்கிளை அதிக வேகத்துக்கு இயக்கும். இதில் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் மடக்கி கையடக்கமாக எடுத்து செல்லும் வகையில் உள்ள "கோ-சைக்கிள்' பிரபலமாகி வருகிறது.

சைக்கிளின் நடுப்பகுதியையும், ஹேண்ட் பாரையும் மடக்கி சாதாரணமாக எடுத்து சென்றுவிடலாம். மணிக்கு சுமார் 35 கி.மீ. வேகத்தில் இது இயக்கக் கூடியது. 3.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜாகிவிடும் இந்த கோ-சைக்கிளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வரை இயக்கலாம். இதன் விலையோ ரூ.3.88 லட்சமாகும். 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com