சிரி... சிரி...

'ஜாமினில் வந்த தலைவர் எப்பவும்போல அசிங்கமா பேசாமல் ரொம்ப அடக்கி வாசிக்கிறாரே!''
சிரி... சிரி...
Updated on
1 min read

'ஜாமினில் வந்த தலைவர் எப்பவும்போல அசிங்கமா பேசாமல் ரொம்ப அடக்கி வாசிக்கிறாரே!''
'எல்லை தாண்டக் கூடாதுன்னு ஜட்ஜ் சொன்ன நிபந்தனையை தப்பா புரிஞ்சுக்கிட்டாராம்.!''



'எனக்கு டைவர்ஸா வாங்கிக் கொடுத்துடுங்க வக்கீல் சார். என் மனைவியோட தொணதொணப்பு தாங்க முடியலை!''
'இதுக்கெல்லாம் டைவர்ஸா.. பிரச்னையை பேசி தீர்த்துக்கலாம் சார்..''
'பேசி... யா....? பேச்சுதான் சார் பிரச்னையே...?''

'பொதுவாக பத்து என்றதுக்குள்ளேதானே சொல்லுவாங்கா.. நீ என்னப்பா ஐந்துன்னு சொல்றதுக்குள்ளே பீரோ சாவியை எடுன்னு கேக்குறே?''
'மானத்தை வாங்காதய்யா? எனக்கு ஐந்துக்கு மேலே தெரியாது.''



'உனக்கு கை, காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு. 
நீ எதுக்கு திருட்டுத் தொழில் செய்யறே?''
'தெரியாத மாதிரி கேக்கறீங்களே எசமான்.  கை, கால் நல்லா இருக்கிற வரைக்கும்தானே  இந்தத் தொழிலை செய்ய முடியும்!''



'ரைட்டுல கையை காட்டிட்டு என்னய்யா லெப்டுல திரும்பறே?''
'மழை தூறுதான்னு கையை நீட்டி பார்த்தேன் சார்..''


'நடிக்க வாய்ப்பில்லாததால்தான் நீங்க மேரேஜ் பண்ணிக்கறீங்கன்னு பேச்சு அடிபடுதே மேடம்..''
'அப்ப. இவ்வளவு நாளா மேரேஜுக்கு வாய்ப்பில்லாததால்தான் நடிச்சேன்னு சொல்லுவாங்களா?''



'டான்ஸ் மாஸ்டரை காதலிச்ச நீங்க ஏன் அவரை மேரேஜ் பண்ணிக்கலை?''
'அவர் சொல்றபடியெல்லாம் நம்பளால ஆட முடியாதுங்க..!''



'காமெடி நடிகரை ஹீரோவா போட்டு  படம் எடுத்தீங்களே என்னாச்சு''
'வில்லன் கோஷ்டி அடிக்க வரும்போது, திருப்பி அடிக்காமல் குனிந்து முதுகைக் காட்டி அடிச்சிட்டு போங்கடான்னு சொல்றாரு சார்!''



'அந்தப் பாடகர் ஏன் கண்ணை மூடிக்கிட்டு பாடறார்?''
'சார்.. ஆடியன்úஸாட ரியாக்க்ஷனை பார்த்துட்டா, அவரால் பாட முடியாதாம்!''



'வர வர ஆஸ்பத்திரி கூட தியேட்டர் மாதிரி ஆயிடுச்சி!''
'எப்படிங்க..''
'எல்லா பெரிய ஆஸ்பத்திரிங்களும் காத்து வாங்குதே!''

-வி.ரேவதி,
தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com