சிரி... சிரி...

'அவர் பச்சையா பொய் சொல்றாரு?''அவர் மொத்தம் எத்தனை கலரில் பொய் சொல்லுவார்!'
சிரி... சிரி...
Updated on
1 min read


'அவர் பச்சையா பொய் சொல்றாரு?'
'அவர் மொத்தம் எத்தனை கலரில் பொய் சொல்லுவார்!'

ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.


'இவ்வளவு பெரிய வீட்டுக்கு கரண்டு பில்லு ஆயிரம் ரூபாய்தானா?'
'யோவ். நான் வீட்டுக்கு மேலேயே சோலார் போட்டு வைச்சிருக்கேன்!'

-மா.சந்திரசேகர்,
கரூர்.


'சீக்கிரமா ஒரு சாக்குப் பை கொடுங்க.. பஸ்ஸை பிடிக்கணும்!'
'அத்தனை பெரிய சாக்குப் பை எங்கக் கடையில் இல்லீங்களே!'

ஆர்.சி.முத்துக்கண்ணு,
திருச்சி.


'உங்க வீட்டுக்கு பிஸ்கட், சாக்லெட் வாங்காமல் வந்ததுக்கு உங்க பையன் பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டுறானே?'
'அவன் சொன்னபடியே செய்திருடுவான். 
எதுக்கும் உஷாராகவே இருங்க!'

-எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

'நிஜ டிராமாக்கள் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?'
'அரசியல் டிராமாக்கள் நிறைய நடக்க ஆரம்பிச்சதுதான்!'

ராஜி ராதா,
பெங்களூரு.


'மாமா. உங்க மகளுக்கும், எனக்கும் பொருத்தம் இல்லைன்னு ஜோசியர் சொன்னதைக் கேட்காம அவளைக் கட்டி வைச்சு தொலைச்சிட்டீங்களே?'
'தொலைச்சிட்டியா? எங்கேடா தொலைச்சே!'

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.


'பேப்பர் ரோஸ்ட் பழசுன்னு எப்படி சார் கண்டு பிடிச்சீங்க?'
'நேத்து தேதி போட்டிருக்கே?'


'ஆஸ்பத்திரியில இருக்கிற நண்பனை பார்க்க போகலாமா?'
'போகலாம். அதுக்காக ஆரஞ்சுக்குப் பதிலா தக்காளி வாங்கிட்டு போனாதான் சந்தோஷப்படுவான்னு சொல்றது ரொம்ப ஓவர்!'

ப.சோமசுந்தரம்,
கோவிலம்பாக்கம்.

'மணி பர்ஸ் யாரிடம் இருக்கும்.  உங்களிடமா?, மனைவியிடமா?'
'மணி அவங்கக்கிட்ட.  பர்ஸ் என்கிட்ட...'


'உங்க மனைவியிடம் எப்போதாவது சண்டை போட்டதுண்டா?'
'நெவர். அவங்களுக்கு கராத்தே தெரியும்.'


'உங்களுக்குப் பிடித்த புத்தகம்..?'
'சமையல் குறிப்புப் புத்தகங்களே..!'

-என்.கே.மூர்த்தி,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com