

கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான படம் "லவ் டுடே'. பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியான போதே ஒருவித எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலிருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸான முதல் நாளிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களையும் கடந்தும் படம் தியேட்டர்களில் ஓடி வருகிறது. ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் அதைவிடக் கிட்டத்தட்ட 10 மடங்கு வசூலை ஈட்டிவிட்டது. இப்படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தினர் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இப்படம் ஹிந்தியிலும் அது ரீமேக் செய்யப்பட உள்ளது. அதை போனி கபூர் தயாரிக்கிறார்.
---------------------------------------------------
'சிறுத்தை' சிவா, முதன்முறையாக சூர்யாவுடன் இணையும் "சூர்யா-42' படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பைத் தூண்டி வருகிறது. சூர்யா, திஷா பதானி, யோகி பாபு எனப் பலரும் நடித்து வருகின்றனர். இந்தக் கதை குறித்து சிவாவின் வட்டாரத்தில் விசாரித்துபோது, "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு கதை அவருக்குத் தோன்றிவிட்டது. ஆனால், அதை படமாக்கினால் அதற்கான வியாபாரம் சாத்தியமா என எண்ணியதால், அப்போது இந்தக் கதையை அவர் தொடாமல் இருந்தார். "பாகுபலி', "கே.ஜி.எஃப்.' போன்ற பிரமாண்ட படங்கள் கொடுத்த நம்பிக்கையில் அந்த கதையை இப்போது கையில் எடுத்திருக்கிறார்'' என்கிறார்கள். இப்பவே ரூ.400 கோடிக்கு வர்த்தகம் நடந்திருப்பதாக பேச்சும் உலவுகிறது.
---------------------------------------------------
பாலிவுட்டில் காதல் ஜோடிகள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றனர். நடிகர் ரன்பீர் கபூர் தன் காதலியான நடிகை அலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். கத்ரீனா கைஃப் தன் காதலன் விக்கியைத் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொண்டார். அந்த வரிசையில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இணைய இருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிகை கியாரா அத்வானியை காதலிப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தது. தற்போது அது உறுதியாகியுள்ளது. பிப்ரவரியில் திருமணம்!
---------------------------------------------------
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெயசுதா சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "வெறும் பத்து படங்கள் நடித்து முடித்தவுடனே கங்கனா ரணாவத் போன்ற பாலிவுட் நடிகைகளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். ஆனால் திரையுலகில் பல தசாப்தங்களாக பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கு அதிலும் குறிப்பாக தென்னிந்திய திரைப்படத் துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு அவர்களின் பணிக்கான எந்த ஒரு உரிய அங்கீகாரமும் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவதில்லை'' எனத் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.