எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சிரி... சிரி...

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:26 am IST

"ஆபிசுல என் வீட்டுக்காரர் கையால் லஞ்சம் வாங்க மாட்டார்!''
" உண்மையாகவா?''
"ஆன்லைனில் மட்டுமே வாங்குவார்!''
-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

"அவர் போலி டாக்டரா இருப்பாரோ?''
"ஏன்? அப்படி சந்தேகப்படுறே?''
"பின்னே. 4 மாசமாக கர்ப்பமா இருக்கேன்னு சொன்னதுக்கு தமிழ் மாசமா, இங்கிலீஷ் மாசமான்னு கேட்டாரே?''

*******

"ஏங்க ஒரு நிலத்துக்கு இ.சி. (வில்லங்கச் சான்றிதழ்) வாங்கணுங்க!''
"அது அவ்வளவு ஈஸி இல்லையே! செலவாகும். பராவாயில்லையா?''
-சம்பத்குமாரி, பொன்மலை.

"உங்க கம்பெனி தயாரிக்கிற ரப்பர் நல்லா அழிக்குது சார்!''
"உண்மைதான். நான் தயாரித்த  
ரப்பர் என் சொத்தையே அழித்ததே!''
-எஸ். வேல் அரவிந்த், திண்டுக்கல்.

"அந்த கால்நடை டாக்டர்கிட்ட மட்டும் ஏன் கூட்டம் அதிகம் வருது!''
" அவரு நாய் வாலை கூட நிமிர்த்துவாராம்!''

*******

"டாக்டர் . டி.வி. சீரியல் பார்த்தா தலைவலி வருது!''
"அழுதா தலைவலி வர்றதான் செய்யும்!''

*******

"அந்த நகைக்கடையில் திருடு போயிடுச்சு!''
" காமிராவில் தெரியுமே!''
"திருடு போனதே காமிராதானாம்!''
-தீபிகா சாரதி, சென்னை.

"சம்மர் வில்லனா அது யாருடா?''
"சம்மர் கோச்சிங் கிளாஸ்தான்!''
-பி.கவிதா, சிதம்பரம்.

"இன்னிக்கு ஆபிஸýக்கு லீவு போடுங்க!''
"ஏன் டியர். வடகம் பிழியணுமா?''
-பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

"மாசக் கடைசியில் கடன் வாங்குறதை விட்டுட்டியா? ஏன்?''
"சம்பளத் தேதியை மாசக் கடைசியில் மாத்திட்டாங்களே?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

"உங்க பையன்தான் ஸ்கூல் பர்ஸ்ட் !''
"அப்படியா?''
"ஆமாம். பள்ளிக்கூடம் முடிந்த
வுடன் முதல் ஆளா ஓடுகிறான்?''
-க.ராஜேந்திரன், மதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.