சிரி... சிரி...

சிரி... சிரி...

என்னப்பா. கீர வடையில் தண்ணியா இருக்கு..''
"இது ஈர வடைங்க..?''

-தீபிகா சாரதி, சென்னை.

"தோசைக்கு விதவிதமான சட்னி தருவோம்?''
"விதவிதம்னா?''
"உப்பு இல்லாம ஒரு சட்னி, காரம் போடாமல் ஒரு சட்னி..''

-ஏ.நாகராஜன், பம்மல்,

"அம்மா.. தாயே பசி உயிர் போகுது..?''
"சாப்பாடு இன்னும் ஆகலை..?''
"அம்மா தாயே.. பர்கர், பீட்சா இருந்தால் போடுங்க?''
-அ.செந்தில்குமார், சூலூர்.

"பறக்கும் தட்டை  பார்த்ததாகப் பொய் சொல்றான்?''
"ஏன் பொய் சொல்றே..?''
"அந்தத் தட்டுல தோசை இருந்ததுன்னு ரீல் விடறானே?''

"இது ஓட்ஸ்ல செஞ்ச இட்லியா?''
"ஓட்டலில் செய்த ரைஸ் இட்லி''

"என்னங்க? சாம்பாரில் உப்பு ஜாஸ்தியா போட்டுட்டேனே? வேஸ்ட் ஆயிடுமா?''
"சாப்பிட நான் இருக்கேன். வேஸ்ட் ஆகாது டார்லிங்..''
-பர்வதவர்த்தினி, பம்மல்.

"இன்றைய ஸ்பெஷல் ஜெயிலர் சட்னின்னு இந்த ஹோட்டலில் போட்டிருக்கே..?''
"அட அது புதினா சட்னிதான் சார்..''
-துடுப்பதி வெங்கண்ணா, பெருந்துறை.

"பலா வியாபாரம் எப்படி நடக்குது?''
" சார். "லாப'-த்தில்தான் இருக்குது..''
-ப.சோமசுந்தரம், சென்னை-129.

"செட் தோசை ஆர்டர் பண்றவங்களை மட்டும் சோபாவுல உட்கார சொல்றாங்களே.. ஏன்?''
"அது சோபா செட் தோசையாம்..''

"இட்லி தும்பைப் பூ மாதிரி வெள்ளைவெளேருன்னு இருக்கும்னு சொன்னீங்க? இப்போ பழுப்பா இருக்குது..''
"முதல் நாள் வெள்ளை வெளேர்னு இருக்கிற பூ, மறுநாள் பழுப்பா இருக்கறது இல்லையா சார்..''

"பெண்டாட்டியே காப்பி போட்டு வந்து கொடுத்தால் அதோட ருசியே தனிதான் சார்..''
"அதுக்கு நீங்க அந்தக் காலத்தில் பிறந்திருக்கணும் சார்..''

"கிச்சனில் ராத்திரி பாத்திரங்களை உருட்டின சத்தம் கேட்டும் ஏன் என்னை எழுப்பலை?''
"நீங்கதான் சமையலுக்கு கொண்டைக்கடலை ஊற வைக்கறீங்கன்னு நினைச்சேன்..''

"இங்கே சாப்பிடறதுக்குன்னு சொல்லிவிட்டு இப்போ ஸ்வீட்டை பார்சல் கட்ட சொல்றீங்களே சார்..''
"முதலில் பார்சல் சொல்லியிருந்தா, கொசுறா கொடுத்த காராசேவ் கிடைச்சிருக்காதே...''
-வி.ரேவதி, தஞ்சை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com