சிரி... சிரி...

'எ'ங்க மாமனாருக்கு ரொம்ப குசும்புதான்!''ஏன்டி.. என்னாச்சு..?''அறுபதாம் கல்யாணத்திலும்  மாமியாருக்கேதான் தாலி கட்டணுமான்னு கேக்குறாருடி?'
சிரி... சிரி...

'எ'எங்க மாமனாருக்கு ரொம்ப குசும்புதான்!'
'ஏன்டி.. என்னாச்சு..?'
'அறுபதாம் கல்யாணத்திலும்  மாமியாருக்கேதான் தாலி கட்டணுமான்னு கேக்குறாருடி?'

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

'அர்ச்சனை தட்டில் ஆதார் கார்டையும் வைத்துக் கொடுக்கிறாயே ஏன்டி..?'
'அவர் ஹைடெக் அர்ச்சகர்டி. ஆதார் நம்பரையும் சொல்லித்தான் அர்ச்சனை பண்ணுவார்!'

-நாஞ்சில் க.நாகராஜன், பறக்கை.

'என்னடி கமலா.. கடனை வாங்காமலே எப்படி சமாளிக்கிறே..?'
'கடன் வாங்கின மாதிரி நினைச்சுதான்..'



'என்னடி நீ.. கடனுக்காக வேலை செய்யறீயா..?'
'ஆமாடி. சம்பளத்தைவிட அதிகமாவே அட்வான்ஸ் வாங்கிடறேன்.. அப்புறம் எப்படி?'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'என்ன விமலா.. நன்றியுரைக்கு எதுக்கு பக்க வாத்தியம்..?'
'ஆமாம் கமலா. நன்றி கீர்த்தனை பாடப் போறாராம்..'

-பர்வதவர்த்தினி, பம்மல்.

'புருஷனை அவர் போக்குலேயே போய் திருத்த முயற்சி பண்ணு கலா..?'
'அப்போ என்னையும் குடிக்கச் சொல்றியா சரசு..'



'அப்பனுக்குத் தப்பாம என் பிள்ளை பிறந்திருக்குடி..'
'ஏன் அப்படி சொல்றே..?'
'ஒரு அதட்டல் போட்டா அப்படியே 'உச்சா'  போயிடறான்டி..'



'எதிர்வீட்டுல  என்னடி பிரச்னை..'
'ஆமாடி. எதிர்வீட்டுக்காரன்கிட்ட வேலைக்காரி, 'நான் இருக்கணுமா?, உன் பெண்டாட்டி இருக்கணுமான்னு முடிவு பண்ணுங்க' -ன்னு சொல்லிட்டாளாம். அதான்..'



'என் லவ்வர் ரமேஷ் ரொம்ப பொறுப்பானவன்டி. அவன் தங்கச்சி கல்யாணத்தை முடிச்சிட்டுதான் நம்ப கல்யாணமுன்னு சொல்றான்டி..'
'உஷார்டி. உன் கல்யாணத்தையும் முடிச்சிட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவேன் சொல்லப் போறான்.. பார்த்துக்கோ..'



'உன் மாமியாருக்கு தடுப்பூசின்னு பேர் வச்சிருக்கியே? ஏன்?'
'அதுக்கு எதிர்ப்புச் சக்தி அதிகம்டி...'



'என்னடி இது. 'நீங்கள் அழைக்கும் நபர் தற்சமயம் பசியாக இருப்பதால் பின்னர் அழைக்கவும்னு மேசேஜ் வருதே?'
'அது ரெக்கார்ட் வாய்ஸ் இல்லடி. உன் வீட்டுக்காரரே பேசறாருடீ...'

-வி.ரேவதி, தஞ்சை.

' என்னடி..அலைகள்கிட்டே டாக்டர் ஏதோ பேசாறே?'
'ஓய்வெடுங்கன்னு அட்வைஸ் பண்றாரு போலிருக்குடி..!'



'கமலா.. நீ விற்கிற ஆப்பத்தை 'இடி'யாப்பமுன்னு சொல்றியே?'
'பஸ்ஸில் கொண்டு வர்றேனே..?'

-லெ.நா.சிவக்குமார்,  சென்னை-33

'எதுக்குடி உன் மாமியாரை திடீர்னு ஹோமில் இருந்து கூட்டிட்டு வந்துட்டே..?'
'உரிமைத் தொகை அவங்களுக்குதான் கிடைச்சிருக்கு. அதான்..'

-ப.சோமசுந்தரம், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com