

பாரம்பரியமும், தொன்மையும் மிக்கத் தமிழ்க் கலாசாரத்தின் மீது வெளிநாட்டுப் பயணிகள் தனிக் கவனத்தைச் செலுத்தி, சுற்றுலாவுக்கு வருகை தருகின்றனர். இவர்கள் ரசிக்கும் சுற்றுலாத் தலங்களில் ஆகச் சிறந்தது தஞ்சாவூர் பெரிய கோயிலாகும்.
தஞ்சை பெரிய கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் என பலவாறாக அழைக்கப்படும் இந்தக் கோயில் உலகமே வியக்கும் அளவுக்கு கம்பீரமாய் நிற்கிறது. சோழ நாட்டில் பரந்து விரிந்தோடும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இது, 10ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் கட்டிய இதை பல்லாயிரக்கணக்கானோர் வந்து, ஆண்டுதோறும் பார்த்து பிரமித்து போகும் அளவுக்கு இதன் சிறப்புகளும் உயர்ந்து நிற்கிறது. இது நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில்களில் ஒன்று.
நகரின் மையப் பகுதியில் உள்ளதால் ஆண்டுதோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
சிவகங்கை பூங்கா: தஞ்சை நகராட்சியால் மக்கள் பூங்காவாக 1871 72இல் உருவாக்கப்பட்டது . இது பிரகதீஸ்வரர் கோயிலின் கிழக்கே அமைந்துள்ளது. சிவகங்கை குளத்தை உள்ளடக்கியது.
அரண்மனை: சோழர்கால அரண்மனை அல்ல; நாயகர்களால் கட்டப்பட்டது, தஞ்சை நகரில் உள்ள இந்த அரண்மனை. கி.பி. 1674-இல் இருந்து 1855ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இந்த அரண்மனை இருந்தது, தற்போது இது சுற்றுலாத் தலமாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.