பேல்பூரி

'உழைப்புக்கும் அதிர்ஷ்டத்துக்கும் என்ன வித்தியாசம்?''''நாம் வெற்றி பெற்றால் அது உழைப்பு. பிறர் வெற்றி பெற்றால் அது அதிர்ஷ்டம்..''
பேல்பூரி


கண்டது

(திருச்சி மாநகரில், ஆட்டோபின்புறம்...)

''எட்டிவிடும் தூரத்தில் வெற்றியும் இல்லை; அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை.''

-பொறிஞர் ப. நரசிம்மன், திருச்சி.

( சென்னை, கே.கே.நகரிலுள்ள இட்லி கடையின் பெயர்)


''இட்டு அவி''

-அண்ணா அன்பழகன் அந்தணப்பேட்டை.

(திண்டுக்கல் அருகே உள்ள ஊரின் பெயர்)
 

''புகையிலைப்பட்டி''

-கீதா முருகானந்தம், கும்பகோணம்.


கேட்டது

(திருச்சி பூங்கா ஒன்றில் இருவர் பேசியது..)


''என்ன? இன்னிக்கு சைலன்ட்டா வர்றீங்க? வீட்டில் ஏதாச்சும் பிரச்னையா?''
''நான் வாயை திறந்தாலே நீங்க காதை பொத்திக்கிறீங்களே..?''
''என்ன சார். தினமும் ஒரு சீரியல் எடுக்கிற அளவு உங்க வீட்டு பிரச்னைகளைச் சொன்னா
எப்படி?''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(பல்லாவரத்தில் இரு இளைஞர்கள் பேசியது)
'

'உழைப்புக்கும் அதிர்ஷ்டத்துக்கும் என்ன வித்தியாசம்?''
''நாம் வெற்றி பெற்றால் அது உழைப்பு. பிறர் வெற்றி பெற்றால் அது அதிர்ஷ்டம்..''

-ஆர்.ராஜலட்சுமி, கோவிலம்பாக்கம்.

(சென்னை கோவிலம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இரு பெண்கள் பேசியது)


''உனக்கு தான் உரிமைத்தொகை கிடைக்கலையேடி... அப்புறம் எதுக்கு எதுத்த வீட்டுக்காரிக்கிட்ட கிடைச்சிருச்சின்னு சொன்னே?''
''அவளை கடுப்பேத்த தான்!''

-ப.சோமசுந்தரம், சென்னை 129.

யோசிக்கிறாங்கப்பா!

நாம் வந்தால்
நாலுபேர் நிற்க வேண்டும். ஓடக்கூடாது.

-கே.எம்.இளங்கோ, பரமத்திவேலூர்.

மைக்ரோ கதை


புதுமணஜோடி ஒன்று அந்தப் பிரபல ஹோட்டலில் சாப்பிட்டு, நாலு பார்சல் சாப்பாடு வாங்கி வெளியே வந்து, அமர்ந்திருந்த மூன்று பிச்சைக்காரர்களுக்கு கொடுத்தனர். மீதம் ஒன்றை வாசலில் நின்றியிருந்த வாட்ச்மேனிடமும் கொடுத்துட்டு கிளம்பிவிட்டனர்.
இதை கவனித்த ஹோட்டல் மேனேஜர் நேராக வாட்ச்மேனிடம், '' நாங்க தான் தெனம் சாப்பாடு தர்றோமே. அப்புறம் எதுக்குய்யா? சாப்பாடே பார்க்காதது மாதிரி சந்தோஷமா கையெடுத்து கும்பிட்டு வேற வாங்குறே?'' என கேட்டார்.
இதற்கு வாட்ச்மேன் பணிவாக,
''இல்லை ஐயா. புதுசா கட்டிக்கிட்ட ஜோடி, சந்தோஷமா கொடுக்கிறது வேணாமுன்னு சொன்னா மனசு சஞ்சலப்படும். இதன் மூலமா வாழ்த்துகள் கிடைக்குங்கிற நம்பிக்கை வீண் போயிடக்கூடாது. அதனாலே தான் வாங்கினேன்'' என்றார்.
இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே குழந்தையோடு பிச்சை
யெடுத்து வந்த பெண்மணியிடம் தான் வாங்கின அந்த சாப்பாடு பொட்டலத்தை கொடுத்தார் வாட்ச்மேன். மேனேஜர் வாட்ச்மேனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

-பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

எஸ்.எம்.எஸ்.


தேடி பெற வேண்டியது செல்வம்.
தேடாமல் பெற வேண்டியது செல்வாக்கு.

-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை குமரி.

அப்படீங்களா!

செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் - ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உலகமே தன்னிச்சையாக இயங்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்மார்ட் போன் முதல் விண்வெளிக்குச் செல்லும் செயற்கைக்கோள்கள் வரையில் அதில் உள்ள சென்சார்களை வைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தத்ரூபமாக இயக்குகிறது.
'ஏஐ ஓபன் சாட் பாட்' எனும் சாட் ஜிபிடி தொழில்நுட்பம் அனைத்து வகையான கேள்வி
களுக்குப் பதிலளித்து உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த ஏஐ தொழில்நுட்பத்தை மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றில் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனமே தயாரித்துள்ள இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வாட்ஸ் ஆப்பில் அனைத்து விதமான கேள்விகளைக் கேட்டு பதில் தெரிந்து கொள்ளலாம்.
சமையல், சுற்றுலா, கல்வி என அனைத்து விதமான கேள்விகளுக்கும் ஏன் பயனர்களுக்கு ஜோக் தேவைப்பட்டால் அதையும் இந்த ஏஐ சாட் பாட்டிடம் கேட்டு பெறலாம்.
ஃபேஸ்புக்கிலும் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை விரைவில் மெட்டா அறிமுகம் செய்ய உள்ளது.
கேள்விக்கான பதில் அளிப்பது மட்டுமல்லாமல், பயனர்களின் கட்டளைக்கு ஏற்ப ஸ்டிக்கர் புகைப்படங்களையும் 5 விநாடிகளில் வரைந்து அளிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தையும் மெட்டா அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஏஐ தொழில்நுட்பத்தை வாட்ஸ்ஆப் தனிநபர், குழுக்களில் பயன்படுத்தலாம். தற்போதைக்கு இந்த புதிய சேவையை மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com