சிரி... சிரி...

''ஏன்டி, உன்னோட கணவர்தான் காணாமல் போனாரு? அதுக்கு ஏன் உன்னோட போட்டோவை கொடுத்து காணோமுன்னு விளம்பரம் கொடுத்திருக்கே?''''நான் காணோமுன்னு தெரிஞ்சாதானே அவர் தைரியமா வீட்டுக்கு வருவார்!''
சிரி... சிரி...

''ஏன்டி, உன்னோட கணவர்தான் காணாமல் போனாரு? அதுக்கு ஏன் உன்னோட போட்டோவை கொடுத்து காணோமுன்னு விளம்பரம் கொடுத்திருக்கே?''
''நான் காணோமுன்னு தெரிஞ்சாதானே அவர் தைரியமா வீட்டுக்கு வருவார்!''

-ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.


''உன் கணவர் தூக்கத்துல பாடுகிறாரா, பாடிட்டு போகட்டுமே?''
''இல்லடி. இடையிடையே  என்னை சபாஷ்னு சொல்ல சொல்றாரே?''

-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை.


''வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்கிறது பெரிய மருமக. கோலம் போடுறது சின்னவ.. இதனால் பெரிய பிரச்னை''
''அதனால் என்ன ஆச்சு..?''
''பெரியவ கோலம் போட்ட பிறகு சின்னவ போய் தண்ணீர் தெளிச்சு சண்டையா போச்சு..''

-ஏ.நாகராஜன்,
பம்மல்.


''என்னடி இது. இந்த முதியோர் இல்லத்தில் நடுத்தர வயசு பெண்களும் இருக்காங்க..?''
''அதுவா? மாமியாரைவிட்டு பிரிய மனமில்லாத மருமகள்கள்தான் அவங்க?''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

''ஏன்டி உன் பையனை சென்னையில் படிக்க வைச்சிருக்கியாமே. நாகர்கோவிலில் இல்லாத காலேஜா..?''
''நீ சொல்றது சரிதான்.  பையன் ஊர் சுற்ற ஆசைப்படுறான். அதான்.''

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.

''மிளகாய்ப் பொடி எப்படி தயாரிக்கிறாங்க..?''
''மிளகாயில்..?''
''அப்போ பல்பொடி...?

-க.நாகமுத்து,
திண்டுக்கல்.

''மாப்பிள்ளை குடிகாரராக இருப்பாருன்னு எப்படி சொல்றே..''
''சமையல்காரரிடம் வகை,வகையாக ஊறுகாய் செய்ய சொல்கிறாரே? அதை வைச்சுதான்!''


-அ.செந்தில்குமார்,
சூலூர்.

''என்ன பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை பாட்டு பாடறாரு?
''பொண்ணைவிட மாப்பிள்ளைக்கு சம்பளம் குறைவாம். அதான்!''

-தீபிகா சாரதி,
சென்னை.

''உன்னை வாழ்த்த வயதே இல்லைடி..?''
''அப்போ எதுக்கு வந்தே?''
''உன்னிடம் திட்டு வாங்க வந்தேன்டி..''



''ஹலோ.. என் மாமியார் உன்னோட வீட்டுக்கு வந்திருக்காங்களாமே..''
''ஆமாம்மா அதுக்கென்ன..?''
''பாதி சண்டையில் வந்துட்டாங்க? புத்திமதி சொல்லி வீட்டுக்குத் திருப்பி அனுப்பு..''



''புதுசா வாங்கின பாத்திரத்தை ஏன் பரண் மேல் போட்டு கவிழ்த்தே..''
''பழசா போகட்டுமேன்னுதான்..''

பர்வதவர்த்தினி,
பம்மல்.

''எதிர்வீட்டு அக்கா போடுற கண்டிஷன் எனக்கு சரியா வரலைக்கா..''
''அப்படி என்ன கண்டிஷன் முனியம்மா..''
''அந்த ஐயா ஆபிசுக்கு போனவுடன் நான் வேலைக்கு வரணுமாம். அவங்க திரும்பி வர்றதுக்குள்ளே கிளம்பிடணுமாம்''




''இந்த செருப்பு பாம்பு தோலில் செய்திருப்பாங்கன்னு தோணுது...''
''எப்படி சொல்றே..''
''போட்டுகிட்டு நடந்தா கால் வளைஞ்சி போகுதே..!''




''என்ன அத்தை.. ரேஷன் கடைக்காரர்கிட்ட உனக்கு சுகர் இல்லைன்னு சொன்னியே..?''
''சுகர் உள்ளவங்களுக்கு உரிமைத் தொகை இல்லைன்னு சொன்னாங்களே அதான்..''

-வி.ரேவதி,
தஞ்சாவூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com