பேல்பூரி

பேல்பூரி

கேட்டது
(பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருவர் பேசிக் கொண்டது)
''ஓடும் ரயிலில் சங்கிலியை இழுத்தா என்ன 
தண்டனை..?''
''அது இழுக்கும் சங்கிலியைப் பொறுத்துதான்...''
-பர்வதவர்த்தினி, பம்மல்.

(மதுரையில் நண்பரின் வீட்டில் கணவனும், மனைவியும்...)
''அம்மா வீட்டுக்கு போய் ஒரு வருஷம் ஆச்சு. இன்னிக்கு போய்ட்டு வர்றேன்..''
''உங்க அம்மா முந்தாநாள்தானே இங்கிருந்து போனாங்க..?''
''நான் அவங்க வீட்டுக்குப் போய் ஒரு வருஷம் ஆச்சுல்லே...''
-நா.குழந்தைவேலு,  மதுரை.

(திருச்சியில் உள்ள டீ கடையில் இருவர் 
பேசியது)
''என்னது.. லூஸ் மோஷனுக்கு பதினெட்டு 
ரூபாயில் மருந்து உள்ளதா?''
''ஆமாம். ஒரு டீயும், பன்னும் சாப்பிடு. 
இல்லாட்டி மெடிக்கலில் போய் நூறு ரூபாய் அழுவு''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.


கண்டது

(தென்காசி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
''கொழுந்தியாள் சாப்பாட்டு கிளப்''
-பொன்.சொர்ணவேல்,  செங்கோட்டை.

(சென்னை - செங்குன்றத்தில் உள்ள உணவகம் ஒன்றின் பெயர்)
''மரத்தடி ஓட்டல்''
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(கன்னியாகுமரி மாவட்டத்தில் எண் பெயரில் உள்ள ஊர்களின் பெயர்கள் சில)
''ஒற்றைவால்விளை, மூவாற்றுமுகம், அஞ்சு 
கிராமம், ஆறுகாணி, ஏழு தேசம், எட்டாம் படை, 
பத்துகாணி.
-அ.ரவீந்திரன், குஞ்சன்விளை.

யோசிக்கிறாங்கப்பா!
தகுதியான எதிரிகள் நமக்கு வெற்றியைத் தேடி தருவார்கள்.
தகுதியற்ற எதிரிகள் மன உளைச்சலைத் தருவார்கள்.
-எஸ்.மாரிமுத்து, சிட்லப்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com