

'என்ன திமிருடி பக்கத்து வீட்டுக்காரிக்கு. என்னை பார்த்து அரை லூசுன்னு திட்டுறா?'
'விடும்மா. உன்னைப் பத்தி அவளுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!'
- என்.கே.மூர்த்தி,
சென்னை.
'தக்காளி விக்கிற விலைக்கு முகத்துல பேஸ்டாக்கி போட்டிருக்கியேடி'
'கவலைப்படாதீங்க. முகத்தை கழுவுன தண்ணியில் ரசம் வைச்சிருவேன்!'
- ப.சோமசுந்தரம்,
சென்னை.
'சீரியல் பார்க்கிறபோது எந்த வேலையும் செய்ய மாட்டீயா?'
'ஆமாங்க. நீங்கதான் செய்யணும்!'
'அப்ப. ரிமோட் மாத்தறதுக்குகூட நான்தானா?'
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
'என்னங்க. நம்ப கிரஹ பிரவேசத்துக்கு வந்தவங்க கடிகாரமாகவே கிப்ட் பண்ணியிருக்காங்க?'
'நான் எல்லோருக்கும் கடிகாரம்தான் மொய் செய்வேன். அதான் எல்லோரும் திருப்பி செஞ்சுட்டாங்க?'
-ம.வசந்தி,
திண்டிவனம்.
'பேய் மழையில என்னடி வேடிக்கை பார்க்கிறே?'
'மழை தண்ணீரில் பேய் ஏதாச்சும் வருதான்னுதான்..'
-பர்வதவர்த்தினி,
பம்மல்.
'ஏங்க. குழந்தை அழுவறது . என்னான்னு பாருங்களேன்!'
'அது ம்மா.. ம்மா.. ன்னு உன்னைத்தான் கூப்பிடுது. நீயே போ!'
'என்னங்க நான் என்ன சொன்னாலும் தலையாட்டிட்டே வர்றீங்களே'
'நீ என்ன சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்!'
-நா.குழந்தைவேலு,
மதுரை.
'எதிர்வீட்டுக்காரன், அவங்க அப்பா உருவாக்கிய பிஸினஸை கரைச்சுட்டானா..? என்னடி சொல்றே'
'ஆமாங்க. அவங்க அப்பா பெருங்காய வியாபாரம் செஞ்சாரு.'
'என்னடி.. அந்தச் சாமியாரு போலின்னு எப்படி கண்டுபிடிச்சே?'
'வாழ்க்கையில் முன்னேற ஜன்னல் வழியாகவும் ஏறிப் போகலாமுன்னு சொன்னாரே அதை வச்சுதான்!'
- மஞ்சுதேவன்,
பெங்களூரு.
'பக்கத்து வீட்டில் என்னடி சண்டை'
'அவங்க மாப்பிளை 'அட்மின்'-ஆக இருக்காருன்னு சொன்னாங்கலே! 'அவரு வாட்ஸ் ஆப் க்ரூப்ல அட்மினா இருக்காராம் !'
'ஆபிஸ்ல வேலை செய்யாம வாட்ஸ் ஆப் பார்த்துனு இருக்கீங்களே மேனேஜர் பார்த்தா திட்ட மாட்டாரா?'
'அவரு அனுப்பின வாட்ஸ் ஆப் வீடியோவைதான் நான் பார்த்துனு இருக்கேன்!'
-தீபிகா சாரதி.
சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.