திரைக் கதிர்

கமலின் மார்தட்டும் வருகை; 'இந்தியன் 2' ஜூனில் வெளியீடு
திரைக்  கதிர்

கமலின் "இந்தியன் 2' வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கமலின் சமீபத்திய பேட்டியில் கூட, "படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது.

இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்று சொல்லியிருந்தார். இதனால் படம் ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதமோ திரைக்கு வருமென எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது ஜூன் மாதம் வெளிவரும் என்று அறிவித்துள்ளனர். ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த "இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996-ம் ஆண்டு, மே மாதம் 9-ஆம் தேதி வெளியானது. பல வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் கைகோத்தது.

கமலின், "வீரசேகரன் சேனாபதி' எனும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மையமாக வைத்து "இந்தியன் 2' உருவானது. இந்தப் படத்தில் கமலுடன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, விவேக், மாரிமுத்து, மனோபாலா எனப் பலரும் நடித்துள்ளனர்.

----------------------------------------------------------------------------------------

தமிழ் சினிமாவின் ஸ்வீட் காதல் ஜேடியாக இருந்து திருமணம் செய்துகொண்டவர்கள் சூர்யா, ஜோதிகா தம்பதிகள். இருவருமே தற்போது பிஸியாக நடித்துவருகிறார்கள். இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்த விடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் இணைந்து 7 படங்களில் நடித்திருக்கின்றனர். அதோடு இருவரும் சேர்ந்து சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு, ஜோதிகா அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினார். அதில்,"ஒருவர் தனது பார்ட்னரை மதிப்பதும் பாராட்டுவதும் முக்கியம். உங்கள் பார்ட்னரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்களை மதிக்கும்போதும், பாராட்டும்போதும் காதல் என்பது தானாக நிகழும் ஒன்று" என்கிறார்.

----------------------------------------------------------------------------------------

அட்லி கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்குச் சென்று தனது முதல் படமாக ஹாருக்கானை வைத்து இயக்கிய "ஜவான்' திரைப்படம் பெரும் வசூல் சாதனைப் படைத்து மெகா ஹிட்டானது.

பாலிவுட்டில் "டேவிட்' படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தாலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முழுப்படத்துக்குமாக பாலிவுட் அறிமுகம் இதுதான். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமும் ஜவான்தான். முதல் பாலிவுட் என்ட்ரியே, நயன்தாராவிற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு ஷாருக் கான் மற்றும் தனுஷ் பற்றிய சுவாரஸ்யமான விஷங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

----------------------------------------------------------------------------------------

"பஜ்ராங்கி பாய்ஜான்', "பத்லாபூர்', "தலாஷ்', "கஹாணி', "பாம்பே டாக்கீஸ்' உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் நவாசுதின் சித்திக். தமிழில் "பேட்ட' படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் தனது மனைவி ஆலியா சித்திக்குடன் கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆலியா சித்திக் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

குழந்தைகளைத் தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி நவாசுதின் சித்திக் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆலியா தனது இரண்டு குழந்தைகளுடன் துபையில் இருந்தார். திடீரென இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மும்பைக்கு வந்த ஆலியா, நேராகத் தனது கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com