புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், பிப்ரவரி மாதத்தில், மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரித்து 1,00,905 வாகனங்களாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
நிறுவனம் பிப்ரவரி 2025ல் 90,670 வாகனங்களை விற்பனை செய்ததாக தெரிவித்தது. இதுவே, கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை 13% அதிகரித்து 91,248 வாகனங்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 80,799 வாகனங்களாக இருந்தது.
ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு, இதே காலத்தில் 9,871 வாகனங்களாக இருந்த நிலையில், தற்போது 2 சதவீதம் குறைந்து 9,657 வாகனங்களாக உள்ளது.
பிப்ரவரி மாதம் விற்பனையின் வேகம் தொடர்வதாக நிறுவனம் தெரிவித்தது. இது உலகளாவிய சமூகத்தில் நீடித்த தேவையை பிரதிபலிப்பதாக ராயல் என்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் தெரிவித்தார்.
இதற்கிடையில், செய்யாறு உற்பத்தி நிலையத்தில் அடுத்த 18 மாதங்களில் பிரவுன்ஃபீல்ட் நிலையத்தில் விரிவாக்கம் மூலம் அடையக்கூடிய திறனை நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதன் மூலம் எங்கள் ஆண்டு உற்பத்தி திறன் தற்போதுள்ள 14.6 லட்சம் வாகனத்திலிருந்து 20 லட்சம் வாகனங்களாக உயரும் என்றார்.
Summary
Motorcycle maker Royal Enfield on Sunday reported an 11 per cent year-on-year increase in total sales to 1,00,905 units in February.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ரூ. 2,500 கோடியில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கும் ராயல் என்ஃபீல்ட்!

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் மொத்த விற்பனை 4% உயர்வு!

முதலிடத்துக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




