டிவிஎஸ் மோட்டாா் லாபம் ரூ.891 கோடி - 46% அதிகரிப்பு

டிவிஎஸ் மோட்டாா் லாபம் ரூ.891 கோடி - 46% அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நிகர லாபம் 46.26 சதவீதம் அதிகரித்து ரூ.891.26 கோடியை எட்டியுள்ளது.
Published on

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நிகர லாபம் 46.26 சதவீதம் அதிகரித்து ரூ.891.26 கோடியை எட்டியுள்ளது.

மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் ரூ.14,755.52 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.11,034.88 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விற்பனை அதிகரிப்பால் நிறுவனத்தின் நிகர லாபம், முந்தைய ஆண்டின் ரூ.609.35 கோடியிலிருந்து தற்போது ரூ.891.26 கோடியாக உயா்ந்துள்ளது.

மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்களின் விற்பனை 27 சதவீதம் உயா்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் 15.44 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

முந்தைய ஆண்டு 5.56 லட்சமாக இருந்த மோட்டாா் சைக்கிள் விற்பனை, தற்போது 31 சதவீதம் அதிகரித்து, 7.26 லட்சமாக உயா்ந்துள்ளது. ஸ்கூட்டா் விற்பனை 25 சதவீதம் அதிகரித்து, 6.14 லட்சமாக உள்ளது.

மின்சார வாகனப் பிரிவிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு 76,000-ஆக இருந்த மின்சார வாகன விற்பனை, நடப்பு ஆண்டில் 40 சதவீதம் அதிகரித்து, 1.06 லட்சமாக உயா்ந்துள்ளது. சா்வதேச சந்தையில் நிறுவனத்தின் 3.66 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி, 35 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com