ஹேவெல்ஸ் 3வது காலாண்டு லாபம் 8% உயர்வு!

ஹேவெல்ஸ் இந்தியா, தனது கேபிள் மற்றும் வயர் வணிகத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7.9% அதிகரிப்பு.
ஹேவெல்ஸ் 3வது காலாண்டு லாபம் 8% உயர்வு!
Updated on
1 min read

புதுதில்லி: நுகர்வோர் மின்சாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹேவெல்ஸ் இந்தியா, தனது கேபிள் மற்றும் வயர் வணிகத்தில், டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 7.9% அதிகரித்து ரூ.300.05 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

கடந்த வருடம், இதே காலாண்டில் நிறுவனம் ரூ.277.96 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியதாக தெரிவித்தது.

இருப்பினும், நிதியாண்டின் 3வது காலாண்டில், ஹேவெல்ஸ் நிறுவனத்தின் விளக்கு மற்றும் சாதனங்கள் பிரிவிலிருந்து கிடைத்த வருவாய் 4% குறைந்து ரூ.423 கோடியாக உள்ளது. மின்சார பொருட்கள் பிரிவிலும், அதன் வருவாய் நிதியாண்டின் 3வது காலாண்டில் 4.3% அதிகரித்து ரூ.1,151 கோடியாக உள்ளது.

2017ல் ஹேவெல்ஸ் கையகப்படுத்திய லாயிட் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் வருவாய் 6.5% குறைந்து ரூ.694 கோடியாக உள்ளது.

3வது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 14.3% அதிகரித்து ரூ.5,587.89 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.4,888.98 கோடியாக இருந்தது. அதே வேளையில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 13.4% அதிகரித்து ரூ.5,189.33 கோடியாக இருந்தது. மற்ற வருமானத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம் 13.67% அதிகரித்து ரூ.5,630.59 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஹேவெல்ஸ் நிறுவனத்தின் ஸ்விட்ச் கியர்ஸ் பிரிவிலிருந்து கிடைத்த வருவாய் 3வது காலாண்டில் 8.2% அதிகரித்து ரூ.624 கோடியாக உள்ளது. இதனிடையில் அதன் கேபிள் மூலம் கிடைத்த வருவாய் டிசம்பர் காலாண்டில் 32.8% அதிகரித்து ரூ.2,241 கோடியாக உள்ளது என்றது.

Summary

Havells India on Monday reported a 7.9 per cent increase in consolidated net profit to Rs 300.05 crore in the quarter ended December 31, 2025.

ஹேவெல்ஸ் 3வது காலாண்டு லாபம் 8% உயர்வு!
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com