கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எல்டிஐமைண்ட்ட்ரீ 3வது காலாண்டு நிகர லாபம் 10.5% சரிவு!

எல்டிஐமைண்ட்ட்ரீ 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10.5% சரிந்து ரூ.970.6 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

News image

LTIMindtree

Updated On :25 ஜனவரி 2026, 5:56 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எல்டிஐமைண்ட்ட்ரீ, 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10.5% சரிந்து ரூ.970.6 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 1,085 கோடி நிகர லாபத்தை ஈட்டியது.

நிறுவனத்தின் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு, 3வது காலாண்டில் இது ரூ.9,661 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிதியாண்டின் 3வது காலாண்டில் இது 11.6% அதிகரித்து ரூ.10,781 கோடியாக உள்ளது.

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் லாபம் 30.7% சரிந்துள்ளது. அதே சமயம் நிறுவனத்தின் வருவாய் 3.7% அதிகரித்துள்ளது.

Summary

IT firm LTIMindtree reported a 10.5 per cent decline in consolidated net profit to Rs 970.6 crore in the October-December quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.