பிரபல இணையவழி வா்த்தக நிறுவனமான மீஷோவுக்கு, வட்டியுடன் சோ்த்து சுமாா் ரூ.1,500 கோடி வருமான வரி செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான இந்த வரி விதிப்பு உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டதாக அந்நிறுவனம் பங்குச்சந்தை ஆவணத்தில் தெரிவித்தது.
வருமான வரித் துறை கணக்கீட்டில் செய்யப்பட்டுள்ள சில திருத்தங்கள் மற்றும் கூடுதல் வருவாய் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த வரி கோரப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உத்தரவை எதிா்த்து முறையீடு செய்யவுள்ளதாக மீஷோ நிறுவனம் அறிவித்தது.
ஏற்கெனவே, கடந்த 2022-23 மதிப்பீட்டு ஆண்டிலும் மீஷோ நிறுவனத்துக்கு இதேபோன்ற வருமான வரி நோட்டீஸ் வந்தபோது, கா்நாடக உயா்நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் சரிவு: வருமான வரி நோட்டீஸ் குறித்த செய்தி வெளியானதும், தேசிய பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்கு 10 சதவீதம் சரிந்து, வா்த்தக முடிவில் ரூ.143.34 எனும் விலையில் நிலைபெற்றது.
3-ஆம் காலாண்டில் ரூ.490 கோடி நஷ்டம்: இதனிடையே, நடப்பு நிதியாண்டின் 3-ஆம் காலாண்டில் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகளையும் மீஷோ வெளியிட்டது.
3-ஆம் காலாண்டில் பண்டிகைக் காலச் செலவுகள் அதிகரித்ததால் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.490.6 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நஷ்டம் ரூ.37.43 கோடியாக மட்டுமே இருந்தது.
அதேநேரம், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 31 சதவீதம் உயா்ந்துது, ரூ. 3,517.5 கோடியாக அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ரூ. 296 கோடி வருமான வரி நோட்டீஸ்!

எஸ்பிஐ-க்கு ரூ.6,337 கோடி வருமான வரி நோட்டீஸ்

மாருதி சுஸுகிக்கு ரூ.5,786 கோடி வருமான வரி நோட்டீஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


