
'எ'என்னங்க.. உங்க பையன் உடனே வீடு மாறச் சொல்றான்?'
'எதிரே கல்யாண மண்டபம் இருக்கறதாலே தினமும் வாழைக்காய், வாழைப்பூ... சாப்பிட்டு அலுத்துப் போச்சாம்...'
'கல்யாணப் பந்தியில் பரிமாறுபவர்கள் ஏன் பாடிக்கொண்டே பரிமாறுகிறாங்க?'
'கல்யாண காண்ட்ராக்டர் லைட் மியூஸிக் பார்ட்டியும் நடத்துறாரு? அதனால் சாப்பாடு, கச்சேரி ரெண்டையும் ஒன்னாக்கிட்டாங்க..?'
-கே.ராமநாதன், மதுரை.
'மாப்பிள்ளை பொண்ணுகிட்ட பேசணுமாம்...'
'இப்பவே பேசச் சொல்லுங்க..? கல்யாணத்துக்கு அப்புறம் அவரால் பேச முடியாதுல்ல..?'
'டெலிபோன் ஆபரேட்டரை கல்யாணம் பண்ணிகிட்டது தப்பா போச்சு...'
'ஏன்?'
'தூக்கத்தில்கூட கால் போடுறா?'
-வி.சாரதி டேச்சு, சென்னை-5.
'மாமா பொண்ணும் உப்புமாவும் ஒன்னுடா...?'
'ஏன்டா அப்படி சொல்றே..'
'வேற எதுவும் இல்லாதப்போ நம் தலையில் கட்டப்படும்...'
-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.
'மொய் கவரில் யார் கொடுத்தது என்ற விவரமே இல்லையே?'
'விடுப்பா அதுக்கு போய் என் கஷ்டப்படுறே..?'
'கவரிலும் ஒன்னுமே இல்லையே...?'
'கூட படிச்ச பொண்ணை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டது தப்பா போச்சு...?'
'என்னாச்சு...?'
'உன்னைவிட நான், கூட படிச்சவள்ன்னு அடிக்கடி குத்திக் காட்டுறா?'
'டாக்டர்கிட்டேயும், வக்கீல்கிட்டேயும் பொய் சொல்லக்கூடாதும்பாங்க? தரகர்கிட்டேயும் பொய் சொல்லக்கூடாதா? புதுசா இருக்கே?'
'நாம் உண்மையைச் சொல்லிட்டா... தரகர் பொருத்தமா பொய் சொல்லி காரியத்தைக் கச்சிதமா முடிச்சிடுவார்...'
'பொண்ணு பார்க்கப் போனியே... என்னாச்சுடா மச்சான்...'
'அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலைடா...?'
'பொண்ணு அவ்ளோ இளமையா?'
'இல்லடா ... அவ்ளோ முதுமை...'
'எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை அமைஞ்சிட்டாருடா ரமேஷ்...'
'ரொம்ப சந்தோஷம் டார்லிங்.. உங்க ஹஸ்பெண்ட் சைடில் எனக்கு ஒரு பொண்ணை பார்த்துடேன்...'
'பொண்ணு பிடிச்சிருந்தா தான் பஜ்ஜின்னு சொல்லிட்டீங்களா? தரகரே...?'
'சொன்னதுக்கு 'பையனைத் தவிர மத்தவங்களுக்குப் பிடிச்சிருக்கு..' ..நாங்க சாப்பிடறோமுன்னு சொல்றாங்க சார்...'
'நீங்க பொண்ணு வீடா?, மாப்பிள்ளை வீடா?'
'ரெண்டும் இல்லை.. பக்கத்து வீடு...'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.