சிரி... சிரி...

'பி.காம். படிச்சிட்டு எந்தத் தைரியத்துல எம்.பி.பி.எஸ்.ன்னு போர்டு மாட்டிட்டு கிளினீக் நடத்துனே..?'
சிரி... சிரி...
Published on
Updated on
1 min read

'அந்த போலீஸ்காரர் பழசை மறக்காதவர்..?''

'எப்படி?''

'இப்பவும் சைக்கிளில் யாராவது லைட் இல்லாம போனால் பிடிச்சி மாமூல் கேட்பாரு?''

-வி.சாரதி டேச்சு, சென்னை-5.

'கபாலி... நகையையும் திருடிட்டு, அது உன் நகைன்னு எப்படி சொல்றே... ?''

'அடகுக் கடையில் நான் அடகு வெச்ச ரசீது என்கிட்ட இருக்கு எஜமான்...''

-எம்.பி.தினேஷ், கோவை-25.

'இந்த டிராபிக் போலீஸ்காரர் ரொம்ப அநியாயமாக நடந்துக்கிறாரா? எப்படி?''

'குண்டா இருக்கிற என் மனைவியை பைக்கில் அழைத்துப் போனதுக்கு ஓவல் லோடு பைன் கட்ட சொல்றாரு...?''

-அ.செந்தில்குமார், சூலூர்.

'பெயிண்டரிடம் ஏன்யா.. நீ சண்டை போட்டே..?''

'ஐயா.. பிரசவத்துக்கு இலவசமுன்னு என்ஆட்டோவில் எழுதச் சொன்னா.. அவசரத்துக்கு இலவசமுன்னு எழுதிட்டாரு..?''

-ப.சோமசுந்தரம், சென்னை.

'பி.காம். படிச்சிட்டு எந்தத் தைரியத்துல எம்.பி.பி.எஸ்.ன்னு போர்டு மாட்டிட்டு கிளினீக் நடத்துனே..?''

'ஐயா.. முன்ஜாமீன் எடுத்து வைச்சிருக்கிற தைரியத்தில்தான்...!''



'அடுத்தடுத்து இரு ஜவுளிக்கடைகளில் திருடியிருக்கிறாய்...?''

'புடவை திருடினேன்.. மேட்சிங் பிளவுஸ் இல்லை.. அதான் இன்னொரு கடைக்குப் போனேன்..

எஜமான்..''

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'இந்தாம்மா.. உங்க புருஷன் பார்க்கில் வீடு தெரியாம முழிச்சிட்டு இருந்தாரு.. கூட்டிட்டு வந்தோம்...''

'என்னங்க முப்பது வருஷமா அந்த பார்க்குக்குதான் போறீங்க? அப்புறம் எப்படி வழி மறந்தது..?''

'(ரகசியமாய்) இல்லடி நடந்துவர சோம்பேறித்தனமா இருந்தது.. அதான் இப்படி செஞ்சேன்..?''



'ஏற்கெனவே ரெண்டு முறை திருடின வீட்டில் ஏன் இன்னிக்கும் போய் திருடினே...?''

'காலண்டரில் இந்த வாரம் புது முயற்சிகளைத் தவிர்க்கவும் போட்டிருந்தது.. அதான் எஜமான்...''



'வண்டிக்கு லைசென்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் எல்லாம் இருக்கா..?''

'இருக்கு சார்..''

'அப்புறம் ஏன்யா நிறுத்தாம போனே..?''

'பிரேக் இல்லை சார்...''

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.



'உங்க அப்பா போட்டதெல்லாம் கவரிங் நகையா...?''

'உங்க மகன் போலி டாக்டர்தானே.. பேசாம இருங்க அத்தே...''



'ஷட்டரை உடைச்சிட்டு ஏன் திருடாம வந்தே..?''

'அது கவரிங் நகைக்கடைன்னு அப்புறம்தான் தெரிஞ்சது எஜமான்...''

-அ.ரியாஸ், சேலம்.



'பக்கத்து வீட்டுல நேத்துதாம்பா புதுசா வைர நெக்ஸல் வாங்கிட்டு வந்திருக்காங்க.. அங்கே போய் திருடேன்..''

'அடுத்து அங்கே போறேம்மா...''

'இந்தா பீரோ சாவி.. வேண்டியதை எடுத்திட்டு சீக்கிரமா அங்கே போ...''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com