தமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பேல் பூரி

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

கண்டது

(சீர்காழி அருகே உள்ள சில ஊர்களின் பெயர்கள்)

'சூரக்காடு, விழக்காடு, புளிச்சகாடு, குமளங்காடு, உப்பங்காடி.'

(கொள்ளிடம் அருகே உள்ள சில ஊர்களின் பெயர்கள்)

'பாலூரான்படுகை, கொன்னகாட்டுபடுகை, சந்தபடுகை, நாணல்படுகை, திபடுபடுகை.'

-எம்.சந்திரசேகர், சட்டநாதபுரம்.

(ஆண்டிப்பட்டியில் உள்ள டூவீலர் பழுது பார்க்கும் கடையின் பெயர்)

'பைக் டாக்டர்'

- அன்னபூர்ணா, கோவில்பட்டி.

(தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தின் பெயர்)

'கத்தரி நத்தம்'

-அதிரை பிறைசாகுல், சென்னை.

கேட்டது

(சிதம்பரத்தில் ஒரு வறுகடலையில் கடைக்காரரும், பெண்மணியும்...)

'கடைக்காரரே இந்த பத்து ரூபாய் காசு எங்க ஊரில் செல்லாது..'

' இந்தியாவில் அடிச்ச காசு உங்க ஊரில் செல்லாதுன்னு உங்க ஊரு என்ன அமெரிக்காவிலா இருக்கு...'

-ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

(கோவையில் உள்ள பேக்கரி கடை வாயில் முன் இருவர்)

'தூக்கத்துல நடக்கிற வியாதி உள்ள உங்க பையனுக்கு

கல்யாணம் செஞ்சிட்டீங்களே.. இப்ப எப்படி..'

'மனைவியையும் கூட்டிட்டு நடக்கிறான்..'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.

(தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரு பெண்கள் பேசியது)

'எங்க லேடீஸ் கிளப் ஆண்டு விழாவில் கலகலப்பான பட்டிமன்றம் நடத்தலாமுன்னு இருக்கும். தலைப்பு ஒன்னை சொல்லேன்..'

'கடையில் இருந்து இட்லி மாவு வாங்கி, இட்லி வார்த்து சாப்பிடறது எதில் சாதகம், பாதகம் அதிகமுன்னு விவாதிக்கலாமே..?'

-எஸ்.பி.சுசீலாதேவி, பல்லாவரம்.

யோசிக்கிறாங்கப்பா!

'பராவாயில்லைங்க' என்ற சொல்லில் ஆயிரம் வலிகளும்,

'ஒன்றுமில்லைங்க' என்ற சொல்லில் ஆயிரம் வார்த்தைகளும் மறைந்திருக்கின்றன.

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை

கோயில் வாசலில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒருவர், 'நமக்கு எந்தச் சிரமும் வந்தாலும் கடவுள் பார்த்துப்பார்' என்றார். மற்றொருவரோ, 'அவர் அப்படிப்பட்டவர் அல்ல. எந்தச் சிரமம் வந்தாலும் வராமல் தடுத்துவிடுவார்' என்றார்,.

இடைமறித்த மூன்றாம் நபர், 'தள்ளி நின்னு விவாதம் பண்ணுங்க?' என்றார். 'எதற்காகத் தள்ளி நிற்கணும்' என்று இருவரும் ஒரு சேர கேட்டனர்.

அதற்கு மூன்றாம் நபரோ, 'சாமி கும்பிட எனக்கு சிரமமாக இருக்கிறது' என்றார்.

-பர்வதவர்த்தினி, பம்மல்.

எஸ்எம்எஸ்

படித்துக் கற்றுகொள்வதைவிட பட்டு தெளிவதே வாழ்க்கை.

-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

அப்படீங்களா!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் 2022-இல் அறிமுகம் செய்யப்பட்ட 'சாட் ஜிபிடி', உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கூகுள் தேடலையும் விஞ்சிய இந்த 'சாட் ஜிபிடி'யின் செயற்கை நுண்ணறிவு தேடுதல் திறன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

'சாட் ஜிபிடி'க்கு போட்டியாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'ஆஸ்க் ஓஎக்ஸ்' ஆன்ட்ராய்டு செயலி பிப்ரவரி 2-இல் அறிமுகமாகி உள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி, உருது, குஜராத்தி, கன்னடம், மலையாளம், ஒடியா, பஞ்சாபி, அஸ்ஸôமி ஆகிய 12 இந்திய மொழிகள் உள்பட 100 மொழிகளில் இந்த 'ஆஸ்க் ஓஎக்ஸ்' செயலி செயல்படுகிறது. அரபி, பிரென்சு, ல்பானிஸ், ஜாப்பனீஸ், ஜெர்மன், இத்தாலி, கொரியன், ரஷ்யா, சிங்கள மொழிகளிலும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

'ஆஸ்க் ஓஎக்ஸ்' செயலியில் தேடும் தகவல்களை ஒலி வடிவில் கேட்டு பெறலாம்.

இந்தியர்களின் தினசரி வாழ்வில் இந்தச் செயலியைப் பயன்படுத்தும் வகையில் இதை உருவாக்கி உள்ளதாக 'ஆஸ்க் ஓஎக்ஸ்' செயலியை உருவாக்கியவரும், க்யூஎக்ஸ் லேப் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திலக்ராஜ் பார்மர் தெரிவித்தார்.

ஆன்ட்ராய்டு வடிவில் உள்ள இந்திய செயலியை விரைவில் ஐஓஎஸ் வெர்ஷனிலும் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

'ஆஸ்க் ஓஎக்ஸ்' செயலி அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 80 லட்சம் பயனாளர்களை ஈர்த்துள்ளது. கட்டணம் மற்றும் இலவசமாகவும் இந்தச் செயலி பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.