• 'லியோ'வுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. பிரசாந்த், பிரபுதேவா, 'மைக்' மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி செüத்ரி, ஜெயராம், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 'தி கிரேட்டேஸ்ட் ஆப் ஆல் டைம்' என்ற வரிகளுடன் வெளியாகியிருந்த இதில் இளம் வயது விஜய்யும், நடுத்தர வயதில் இருக்கும் விஜய்யும் மிஷனை முடித்துவிட்டு பாராசூட்டில் இறங்கி வருவதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
• விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன், சசிகுமார் இயக்கத்தில் தொடங்கவிருக்கும் 'குற்றப் பரம்பரை' வெப் சீரீஸில், வையத்துரை என்கிற பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அதற்காகத்தான் அடர்த்தியான தாடி மீசையும், அள்ளிக்கட்டிய முடியுமாகக் காட்சியளிக்கிறார். ஒரு வருடத்துக்கு முன்பு 'குற்றப் பரம்பரை' வெப் சீரீஸில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது, 'அவசியம் அந்தப் பாத்திரத்தில் நடி' என மகனிடம் சொல்லியிருந்தாராம் விஜயகாந்த். அந்த வெப் சீரீஸுக்காகச் சமீபத்தில் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்களை விஜயகாந்த்திடம் காட்டினாராம் சண்முகப் பாண்டியன். மகனை அந்த வித்தியாசமான கெட்டப்பில் பார்த்து, பூரித்துப்போனாராம் விஜயகாந்த். வெப் சீரீஸ் தொடங்கும் முன்னரே விஜயகாந்த் மறைந்ததுதான் துயரம்.
• ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், இப்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவரா'வின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். ஜான்விக்கு தமிழில் பிடித்த நடிகர் விஜய்சேதுபதி என்பதால், அவரது கோலிவுட் அறிமுகம், நிச்சயம் விஜய்சேதுபதியின் படமாகத்தான் அமையும் என்றும், 2024 ஜான்வி தமிழுக்கு வரும் ஆண்டாக இருக்கும் என்றும் ஜான்வி தரப்பில் சொல்கிறார்கள்.
• இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் 'எல்.ஐ.சி' படத்தின் ஷூட்டிங் சீக்கிரமே தொடங்கவிருக்கிறது. அப்டேட் இல்லாத அப்பாவுக்கும், கரன்ட் டிரெண்டில் விளையாடும் மகனுக்குமான அனுதினப் போராட்டமே படத்தின் கதையாம். இயற்கை, விவசாயம் எனப் பழைமை மாறாத தந்தை பாத்திரத்துக்கு விக்னேஷ் சிவன் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் தெரியுமா... 'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை. 'இயற்கை விவசாயி' பாத்திரம் என்றதும் உடனே சம்மதம் சொல்லியிருக்கிறாராம் சீமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு: தூத்துக்குடியில் வாக்களித்த வேட்பாளா்கள்

பிரதமா் ‘தீவிரவாதி’ என விமா்சனம்: காா்கே பதிலளிக்க கூடுதல் அவகாசம் - தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை

வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்

கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


