திரைக் கதிர்

தமன்னாவின் நடிப்பு பயணம்: 19 ஆண்டுகள் கடந்து அரண்மனை 4 நோக்கி
திரைக்  கதிர்

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் அடுத்து "அரண்மனை 4' உட்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் சினிமாவுக்கு வந்து 19 வருடங்கள் ஆகின்றன.

நடிகை தமன்னா, "சாந்த் சா ரோஷன் செஹரா' என்ற ஹிந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் 2005}ஆம் ஆண்டு மார்ச் 4}ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதையடுத்து தமன்னா, சினிமாவில் அறிமுகமாகி 19 வருடம் ஆனதை அடுத்து அவருக்கு நடிகை காஜல் அகர்வால் உட்பட திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர், "வாழ்த்துகளுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார் தமன்னா.

---------------------------------------------

"போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். அவருக்கு மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "வரலஷ்மி சரத்குமார் மும்பை தொழிலதிபரான நிகோலப் சச்தேவ் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து மும்பையில் பெற்றோர் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயம் செய்துகொண்டனர். இருவரும் கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------------------------------

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது தலைமாறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துத் தேடிவருகிறது. இச்சூழலில் இவரின் தயாரிப்பில் உருவாகி வரும் அமீரின் "இறைவன் மிகப்பெரியவன்' வெளியீட்டிற்குத் தயாராக இருந்த "மங்கை' உள்ளிட்ட படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சமூகவலைதளங்களில் சிலர், அமீரும் ஜாபரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும், அமீர் ஆரம்பித்திருக்கும் உணவகத்தையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.""அடிப்படையாகவே மது, வட்டி போன்ற விசயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தைக் கொண்ட மார்க்கத்தைப் பின்பற்றுகிறவன் நான். நீங்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் என்னை தொடர்புபடுத்திப் பேசுவதால் என் பெயருக்குக் களங்கத்தையும், என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்த முடியுமே தவிர வேறு எந்தப் பயனையும் உங்களால் அடைந்துவிட முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.

---------------------------------------------

மிக்ஜாம் புயலின் போது சென்னை, நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ரசிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார் சூர்யா. சென்னை சுற்றுவட்டார இடங்களில் இருந்து 100 பேரும், நெல்லை சுற்றுவட்டாரத்திலிருந்து 100 பேருமாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட மன்ற நிர்வாகிகள் பலருக்கும் அவர்களது குடும்பத்தினருடன் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.தனிப்பட்ட முறையில் பேசிய சூர்யா, மதிய உணவும் பரிமாறினார். பின்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கு ""வேலை வேலை என்று பணம் சம்பாதிக்க ஓடுபவர்கள், குடும்பத்தையும் மனதில் வைத்துக்கொண்டு வேலை செய்யவும். பெண்கள்தான் வீட்டில் பொறுப்பாக நிர்வாகத்தை கவனித்துக் கொள்வதுடன், குழந்தைகளையும் பொறுப்போடு வளர்க்கிறார்கள். எனவே வீட்டிற்கும் நேரம் ஒதுக்குங்கள். மழை, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நீங்கள் செய்த உதவி மகத்தானது. இப்படி சேவை செய்வது பெரிய விஷயம்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com