பேல்பூரி

பேல்பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

( வேடசந்தூர் அருகே உள்ள ஊரின் பெயர்)

'காக்காதோப்பு'

-ஆர்.லிங்கராஜ், திண்டுக்கல்.

(கிருஷ்ணகிரி அருகே உள்ள ஊரின் பெயர்)

'கரடி கொல்லப்பட்டி'

-சிவராமன் ரவி, பெங்களூரு.

(கன்னியாகுமரி மாவட்டத்தின் கிராமத்தின் பெயர்)

'கடையாலு மூடு', 'பத்துகாணி'.

-அதிரை பிறைசாகுல், சென்னை.

கேட்டது

(கோவையில் ஹோட்டல் ஒன்றில் தம்பதி)

'ஆனியன் ரோஸ்ட் விலை அதிகம். எதுக்கு பார்சல் வாங்கறீங்க?'

'ஆனியன் ரோஸ்ட்டுன்னா உங்க அப்பா நல்லா சாப்பிடுவாரே..'

'விலையெல்லாம் பார்த்தா ஆகுமா?

வாங்குங்க.'

-அ.செந்தில்குமார், சூலூர்,.

(திருச்சி பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் ஒன்றில் இருவர் பேசியது)

'ஊட்டி, கொடைக்கானல் போக இனி இ.பாஸ் தானாம்.. ஆனா அங்கே விட இங்கேயே பரவாயில்லையே..'

'என்னங்க குளு குளு ஊருங்கதானே அது..'

'இப்பே நிலைமை மாறிப் போச்சாம். அங்கேயும் வெயில் கொளுத்துதாம்...'

-அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.

(தஞ்சாவூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் தம்பதி பேசியது)

' என்னடி.. 'தங்கம் எங்கேயோ போயிடிச்சி. நெருங்கவே முடியாது'-ன்னு சொன்னே. மொத்த கூட்டமும் இங்கே நெருங்கி

கிடக்குதே..'

'இப்பதான் வாங்கிக் கொடுக்

கணும்னு உங்களை மாதிரி நிறைய பேருக்கு ஞானோதயம் வந்திருக்கும்போல...'

-பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

யோசிக்கிறாங்கப்பா!

ஒருவனுக்கு ஏற்படும் தோல்வியும்,

அடுத்தவனுக்கு ஏற்படும் வெற்றியும்

பாதிப்பை உண்டு செய்யும்.

-மஞ்சுதேவன், பெங்களூரு.

மைக்ரோ கதை

'சார் மணியார்டர்..' என்று வீட்டு வாசலில் நின்ற தபால் ஊழியர் மாணிக்கத்தின் குரல் கேட்டு வெளியே வந்தார் வருவாய்த் துறை ஊழியர் வரதன்.

மணியார்டர் பார்மில் கையொப்பம் இட்ட வரதனிடம், ஆயிரம் ரூபாயை மாணிக்கம் அளித்தார். ஆனால், மாணிக்கம் வெளியே நிற்பதைக் கண்டு, 'ஓ... டிப்ஸ் எதிர்பார்க்கிறீங்களா?' என்று கேட்டார் வரதன்.

'சார் எங்க டிபார்ட்மென்டுல அந்தப் பழக்கம் கிடையாது. என் பேனாவை திரும்பத் தந்தால் போதும்' என்று மாணிக்கம் சொன்னார்.

அசடு வழிந்தபடியே வரதன் பேனாவை திரும்ப அளிக்க, தன் சைக்கிளில் கம்பீரமாய் புறப்பட்டார் மாணிக்கம்.

-இரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

எஸ்எம்எஸ்

உனது எதிரி உன் பேச்சு.

உனது பலம் உன் மௌனம்.

-ச.அரசமதி, தேனி.

அப்படீங்களா!

கூகுளின் 'லுக்அவுட்' செயலி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலியைப் பயன்படுத்தி கேமராவில் நாம் தேடும் பொருள்களை பதிவிட்டால்போதும், இருக்கும் இடத்திலிருந்து அந்தப் பொருள்கள் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைக் காண்பித்துவிடும். தற்போதைக்கு நாற்காலி - மேஜை, கதவு - ஜன்னல்கள், தேநீர் கோப்பை, புட்டிகள், வீட்டு உபயோகப் பொருள்கள், வாகனங்கள், கழிவறைகளை கைப்பேசி கேமிரா மூலம் கண்டுபிடிக்கலாம்.

உதாரணமாக, நாம் அமர வேண்டுமானால் 'லுக்அவுட்' செயலியில் நாற்காலியைத் தேர்வு செய்து கைப்பேசியை அருகில் சுழற்றினால்போதும், எவ்வளவு தொலைவில் காலியான நாற்காலி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்தச் சேவை பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல், சேமிக்கப்பட்ட வசனங்களை தேர்வு செய்து ஒலி வடிவில் அறிவிக்கும் 'லுக்டூஸ்பீக்' செயலியும் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள எமோஜி, புகைப்படங்களை தேர்வு செய்தாலே இந்த சேமிப்பு வசனங்களை ஒலி வடிவில் பெறலாம். இந்த வசதியை கூகுள் மேப்பில் பயன்படுத்தும்படி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் மேப்பில் காண்பிக்கப்படும் எடிஎம்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றின் தகவலைகளை கூகுள் ஒலி வடிவில் அளிக்கும். இதேபோல், பல்வேறு பகுதிகளில் சக்கர நாற்காலிகள் எந்தந்த இடங்களில் கிடைக்கும் என்ற தகவலும் கூகுள் மேப்பில் இடம் பெறும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு 5 கோடி இடங்களுக்கு மேல் இதில் தகவல் சேமிக்கப்பட்டுள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com