சிரி... சிரி...

'தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரே..?'
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
1 min read

'தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரே..?'

'எப்படி சொல்றே..?'

'இங்கிலீஷ் மெடிசன் சொல்றாங்களே.. அதை சாப்பிட்டா இங்கிலீஷ் பேச வருமான்னு கேட்கிறாரே..?'

-க.அருண்பிரகாஷ், தூத்துக்குடி.



'வாக்குச் சீட்டை ஏன் போஸ்ட் பாக்ஸில் போட்டு வர்றீங்க?'

'ரொம்ப நாளா எனக்கு தபால் ஓட்டு போடணும்னு ஆசை அதான்..!'

பர்வீன் யூனுஸ், சென்னை.



'நம்மிடம் நோட்டு வாங்கியவர்கள் யாரும் நமக்கு ஓட்டு போடலையே ஏன்..?'

'தலைவரே.. நோட்டுவுக்கு ஓட்டு போட நோட்டு கொடுத்ததா நினைச்சு அதுக்கு போட்டுட்டாங்க?'

நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை.



'இது வெறும் கவர்ச்சி பட்ஜெட்தான்னு சொல்றீங்களே.. எப்படி?'

'உள்ளாடைகளுக்கு மட்டும் வரிச்சலுகை கொடுத்திருங்காங்களே..!'



'தேர்தல் செலவுகளை இனிமேல் தேர்தல் கமிஷனே ஏத்துக்கலாமுன்னு இருக்காங்களாம் தலைவா..?'

'அப்ப.. வாக்காளர்களுக்கு கட்சி சார்பில் யார் பணம் கொடுப்பாங்கா..?'



'தலைவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரா இருக்கலாம். அதுக்காக இப்படியா?'

'எப்படி?'

'வடை சுட வேணும்னு கேட்டா, சில பேருக்கு வாய் மட்டும் போதும்னு சொல்றாரே..?'



'எல்லா மாநிலங்களிலும் பெருகி வளர்ந்துகொண்டிருக்கும் தேசியக் கட்சியான நோட்டாவை..?'

'தலைவா.. அது அரசியல் கட்சி இல்லை தலைவா...?'



'அந்த நடிகர் அரசியலுக்கு வரலைன்னா ஜோதிடத் தொழிலை விட்டுடறதா சொன்னீங்களே..?'

'எனக்கு கிடைத்த அவரோட ஜாதகம் தப்புன்னா நான் என்ன பண்ண முடியும்...'



'டி 20 மேட்சுல யாரோட ஆட்டம் ரொம்ப பிடிச்சிருக்குன்நு கேட்டதற்கு தலைவர் என்ன சொன்னாரு..?'

'சியர்ஸ் ஆட்டம்தான்னு யோசிக்காமலேயே சொல்லிட்டாரு..?'



'பிளாங்க் செக்கை தலைவர் கொடுத்தும் அந்த நிர்வாகி ஏன் வாங்கலை..?'

'கையெழுத்து கூட போடாமல் கொடுத்தா எப்படி வாங்குவாரு..?'



'தலைவர் என்ன திடீர்னு இந்தி கத்துக்க ஆரம்பிச்சுட்டாரு...?'

'அவரோட கனவுல பாலிவுட் நடிகைகள் வர ஆரம்பிச்சுட்டாங்களாம்...'



'அரசியல் சாயமுன்னு சொல்றாங்களே.. அப்படின்னா என்ன தலைவா?'

'அடிக்கடி நிறம் மாறிக்கிட்டே இருக்கும்...'



'இந்த ஏரியாவுல பெரிய தாதா இவரு..?'

'அப்படியா? எந்தக் கட்சியில் இருக்காரு?'

வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com