சிரி... சிரி...

என்னோட முதல் பையன் டாக்டர்.. ரெண்டாவது பையன் ஸ்கூல் நடத்துறான்.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
1 min read

என்னோட முதல் பையன் டாக்டர்.. ரெண்டாவது பையன் ஸ்கூல் நடத்துறான்..''

'அப்போ ரெண்டு பேரும் பீஸை பிடுங்குவாங்கன்னு சொல்லுங்கோ...?''



'டாக்டர்... என்னை எல்லா டாக்டர்களும் கைவிட்டுட்டாங்க?''

' கவலைப்படாதீங்க.. உங்க உடம்புக்கு என்ன பிரச்னை?''

'உடம்புக்கு ஒன்னுமில்லை டாக்டர்.. ஆபிஸூக்கு ரொம்ப நாளாகப் போகலை.. மெடிக்கல் லீவ் சர்டிபிகேட் வேணும்..?''



'நீங்க ஏன்.. உங்க மனைவி வந்தா மட்டும்

கண்ணாடி போடறீங்க?''

'டாக்டர்தான்... தலைவலி வந்தா மட்டும்

கண்ணாடி போடச் சொன்னாரு..?''

-வி.சாரதி டேச்சு, சென்னை.



'இரவு தூங்குறதுக்கு முன் மாத்திரையை போட்டுக்கச் சொன்னேனே.. இன்னுமா குளிர் காய்ச்சல் சரியாகலை..?''

'என் படுக்கையைச் சுத்தி மா திரையை போட்டுக்கிட்டு தூங்கினேன் சார்...''

'குளிர் போச்சு... காய்ச்சல் போகலை..''

-பா.சக்திவேல், கோயம்புத்தூர்.



'மருந்தை வாயைத் திறந்து மடக்குன்னு குடிச்சிடு..?''

'மருந்து வரலையே..?''

'பாட்டிலை திறன்னு சொல்ல விட்டுட்டேனா?''

-பர்வதவர்த்தினி, பம்மல்.

'பேசமா.. ஆபரேஷனுக்கு சரின்னு சொல்லுங்கோ...?''

'பேசாம எப்படி? சரின்னு சொல்ல பேச வேண்டியிருக்குமே சிஸ்டர்...''

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'டாக்டர்.. ஆபரேஷனுக்கு முன்னாடி எனக்கு நல்லா கண் தெரிஞ்சது.. இப்போ மங்கலா தெரியுது...?''

'நான் உங்க காதில்தான் ஆபரேஷன் செஞ்சேன்...''

-அ.செந்தில்குமார், சூலூர்.



'டாக்டர்.. என் பையனுக்கு போன மாதத்தில் இருந்து பேச்சே வரலையே?''

'போன மாசம் ஏதேனும் விபத்து நடந்துச்சா?''

'ஆமாம் டாக்டர்.. அவனுக்கு போன மாசம்தான் கல்யாணம் ஆச்சு...?''



'சொல்லுங்க. உங்க காதில் என்ன பிரச்னை?''

'ஹெட் செட் காதில் நிற்கவே மாட்டங்குது டாக்டர்...''

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

'டாக்டர்.. பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்ளோ செலவாகும்...?''

'ஐந்து லட்சம் ரூபாய்...?''

'ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக் கொண்டு வந்தா எவ்ளோ குறைப்பீங்க..?''



'டாக்டர்.. நடுராத்திரியில் கிளீனிக்கை ஏன் திறந்து வைச்சிருக்கீங்க?''

'தூக்கத்துல நடக்கிற வியாதிக்காரன் யாராவது வர்றாங்களான்னுதான்...?''

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

'சின்ன சந்தேகம் டாக்டர்.. உடம்பு உப்பிக்கிட்டே போகுதே ஏன் டாக்டர்...?''

'இதுவா பெருத்த சந்தேகம் ஆச்சே...?''



'வயிறு எரியுதுன்னு டாக்டரிடம் போனீங்களே.. இப்போ எப்படி இருக்கு?''

'பில்லை பார்த்தவுடன் வயிற்றெரிச்சல் அதிகமாச்சு...''

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com