உலகில் ஐந்து கண்டங்கள் அமைந்திருப்பதுபோல, பசிபிக், அட்லாண்டிக், இந்திய, ஆர்க்டிக், அண்டார்ட்டிக் என ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. தற்போது பூமியின் மேற்பரப்புக்கு 700 கி.மீ. கீழே பெருங்கடல் ஒன்று இருப்பதாகவும், இந்த ஆறாம் கடலானது ஐந்து பெருங்கடல்களையும் சேர்த்தாலும் அதைவிட மூன்று மடங்கு பெரியது என்கின்றனர் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
விஞ்ஞானிகள் ஐநூறுக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களின் நடுக்கங்களை ஆய்வு செய்தவுடன் ஆறாம் பெருங்கடல் பூமியின் மேல் அடுக்கின் கீழ் இருப்பதை உறுதி செய்துள்ளனர். பூமியின் மேல் பரப்புக்கு கீழே 700 கி.மீ. தூரத்தில் நீலப் பாறைகளுக்கு இடையில் இந்த ஆறாவது கடல் படிக வடிவில் சிக்கிக் கிடப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமியின் உட்புறத்துக்கும், மேற்பரப்புக்கும் இடையில் மிகவும் சிக்கலான ஒத்திசைவு இருப்பதாகத் தெரிகிறது.
படிக அமைப்பில் சிறிய வடிவத்தில் பெரிய அளவிலான தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஆறாம் கடல், பூமியின் மேற்பரப்பில் இருக்கும் ஐந்து கடல்களின் உறுதித் தன்மையை காத்து ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த ஆறாம் கடல் பூமியின் மேற்பரப்பில் அமைந்திருந்தால், பூமி என்னும் கிரகத்தில் பூமியின் நிலப்பரப்பு கடலால் மூழ்கடிக்கப்பட்டு மலைகள் மட்டுமே தெரியும். மறைந்து கிடக்கும் ஆறாம் கடல் உலகின் பிற பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை மேலும் புரிந்து கொள்ள, விஞ்ஞானிகள் நில அதிர்வு தரவுகளைச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
பூமியின் உட்புறம், மேற்பரப்புக்கு இடையே உள்ள தொடர்பு பற்றியும் இன்னும் அதிகமாகக் கண்டறிய ஆறாம் கடல் குறித்த தகவல்கள் உதவும். பூமியின் அடியில் இருக்கும் ஆறாம் கடல், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் போன்ற புவியியல் நிகழ்வுகளில் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்திருக்கக் கூடும் என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை





