உயிரினங்களின் உலகம்

உலகில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான குணங்கள், சுவாரசியத்தைக் கொண்டிருக்கின்றன.
உயிரினங்களின் உலகம்
உயிரினங்களின் உலகம்
Published on
Updated on
1 min read

உலகில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான குணங்கள், சுவாரசியத்தைக் கொண்டிருக்கின்றன.

அவை என்னவென்று அறிவோம்:

எறும்புகள்: உணவு இருக்கும் இடத்தைத் தேர்வு செய்யும் எறும்புகள் ஒரே நேர் வரிசையில் ஊர்ந்து செல்கின்றன. அவை உணவை உண்டுவிட்டு, தம்மால் முடிந்தவரை சுமந்தவாறு புற்றுக்குள் செல்லும். அப்போது, அவற்றின் வயிற்றின் பின் முனையிலுள்ள காப்பியில் இருந்து "பிரேமோன்' என்ற திரவத்தைக் கசியவிட்டபடியே செல்லும். இவ்வாறு செல்லும் முதல் எறும்பை , அடுத்தடுத்து வரும் எறும்புகளும் ஒன்றன்பின்னர் ஒன்றாகச் செல்லும். வாசனையையும் ருசியையும் தன் ஒரே உறுப்பால் அறியும் எறும்புகள் ஒரே வரிசையில் செல்வது இவ்வாறுதான்.

மலை கொரில்லாக்கள்: உகாண்டாவில் உள்ள பிவாண்டி தேசியப் பூங்காவில் காணப்படும் மலை கொரில்லாக்கள் இங்கு ஏற்படும் வறட்சி, கடுமையான வெப்பநிலையால் அழியும் நிலையில் உள்ளன.

பாண்டாக்கள்: பாண்டா கரடிகள் என்றால், கருப்பு- வெள்ளை நிறத்தில் அழகாக புதுபுசு என்றிருக்கும். அருகிவரும் உயிரினமான பாண்டாக்கள் இயற்கைப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இவை தனியாக வாழ்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலை. மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்தக் கரடிகள் தங்களுக்குள் ஒருவித வாசனை வாயிலாக, தகவல் பரிமாற்றம் செய்துகொள்கின்றன என்பது தெரியவந்துள்ளது.

குட்டி பாண்டாக்கள் தங்களது குடும்பத்தினருடன் மட்டுமே தகவல் பரிமாற்றம் மேற்கொள்கின்றன. ஆனால், பருவ வயது வந்ததும் வேறு பாண்டாக்களுடனும் தகவல்களைப் பரிமாறுகின்றன என்று பல தகவல்கள் கிடைத்துள்ளன.

கங்காரு: குட்டிகளை வயிற்றில் சுமக்கும் கங்காருக்கள் ஒரே தாவில் 30 அடி தூரத்தைக் கடக்கும் திறனுடையவை.

யானை: யானைகளால் குதிக்க முடியாது.

நெருப்புக் கோழி: ஒரே கூட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை இட்டு அடைகாக்கும் பறவை நெருப்புக் கோழியாகும்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

குதிரைகள்: குதிரையின் வயதை பற்களின் மூலமே கணக்கிட முடியும். மனிதனுடன் ஒப்பிடுகையில் குதிரையின் இரைப்பை சிறிதாகவும், பெருங்குடல் நீண்டதாகவும் உள்ளது. இதனால் சத்துகள் சீராக கிடைக்கும். நன்கு வளர்ந்த 450 கிலோ எடை கொண்ட குதிரை நாள்தோறும் 11 கிலோ வரை உணவைச் சாப்பிடும். 45 லிட்டர் வரை தண்ணீர் அருந்தும். குதிரைகளால் வாந்தி எடுக்க முடியாது என்பதால், நச்சுப் பொருளைச் சாப்பிட்டால் இறந்துவிடும்.

இரு கண்களால் 65 பாகை வரையும், ஒற்றைக் கண்ணால் 350 பாகை வரையும் குதிரைகளால் காண முடியும். இரவிலும் குதிரைகளுக்குக் கண் தெரியும். நிறக்குருடு என்பதால், இரு நிறங்கள் மட்டுமே அறியும். இவை தங்களது காது மடல்களை 180 பாகை வரை திருப்பும். தொடுதிறன் நுட்பமானது. கண், காது, மூக்குப் பகுதிகள் உணர்ச்சி மிகுந்தவை.

-சௌமியா சுப்ரமணியன், பல்லாவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.