பேல்பூரி

'50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தா எப்படி?'
பேல்பூரி
Updated on
2 min read

கண்டது

(செங்கல்பட்டில் ஓர் ஆட்டோவின் பின்புறம்... )

'தவிப்பதைவிட

தவிர்ப்பது நல்லது.'

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

(புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'அலுத்தவேலி.'

-பி.ஆஷாலட்சுமி, செம்பனார்கோயில்.

திட்டக்குடி அருகே உள்ள ஊரின் பெயர் 'எழுத்தூர்.'

-ப. இந்திராகாந்தி, பிடாரிப்பட்டு.

கேட்டது

(காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் அரசுப்பேருந்தில் நடத்துநரும் பயணியும்...)

'50 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தா எப்படி?'

'நான் என்னங்க பண்ணட்டும்... ஏ.டி.எம்-ல 500 ரூபாய் நோட்டுத்தான் வருது...'

'அப்ப நானும் 500 ரூபாய்க்கே டிக்கெட் கொடுத்து விடவா?'

-இரா. சாந்தகுமார், ஆதனூர்.

(தில்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் இருவர் பேசிக்கொண்டது...)

'மாப்பிள்ளை மும்பையிலும், பொண்ணு தில்லியிலும் வேலை பார்க்கிறாங்களாம்... பெண்ணோட பெற்றோர் ஐதராபாத்திலும், மாப்பிள்ளையோட பெற்றோர் கொல்கத்தாவிலும், உறவினர்கள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இருக்கிறாங்களாம்...'

'அப்போ பான் இந்தியா கல்யாணம்னு சொல்லுங்க!'

-ஆர். ஹரிகோபி, புது தில்லி.

(சென்னை, தாம்பரத்தில் காய்கறிக்கடையில் பெண்கள் இருவர் பேசிக்கொண்டது...)

'முட்டை விலை ஏறிடுச்சு.... என்ன செய்யுறதுன்னு தெரியல...'

'முட்டைகோஸ் சீப்பாதானே இருக்கு... வாங்கி சமைக்க வேண்டியதுதானே!'

-பி. நாகலட்சுமி பழனிசாமி, கிழக்கு தாம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!

பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை...

மெய் சொல்லி கெட்டவனும் இல்லை!

-கே.அனந்தநாராயணன், மருங்கூர்.

மைக்ரோ கதை

லதா, தன் மகன் கிஷோரிடம் சொன்னாள்...

' படிக்க உட்கார்ந்தால் கவனம் பாடத்தில்தான் இருக்கணும். டிவி, மொபைல் கேம்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டு படிக்கக் கூடாது!'

இதனிடையே அப்பாவின் குரல் ஒலித்தது...

'லதா... கிச்சன்ல சமைக்கிற போது கவனம் சமையல் பேரில்தான் இருக்கணும்... சேனல் பார்த்துக் கொண்டு மொபைலில் பேசிக்கொண்டு சமைக்காதே... சாம்பாரில் உப்பு போடல...'

கிஷோர் குபீர் சிரிப்போடு புத்தகம் திறந்தான்.

- ஏ. நாகராஜன், பம்மல்.

எஸ்.எம்.எஸ்.

தன் மதிப்பே தன்னை உயர்த்தும்

தன்னம்பிக்கையே வாழ்க்கையை உயர்த்தும்!

-த.நாகராஜன், சிவகாசி.

அப்படீங்களா!

2025-ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். நிகழாண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு செயலிகளை கூகுள் பட்டியலிட்டுள்ளது. அதில், 'போக்கஸ் பிரண்ட்' எனும் செயலி உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் டிஸ்டிரிக்ட்: மூவிஸ், ஈவன்ஸ்ட், டைனிங் செயலி முதலிடம் பிடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மாவட்ட அளவில் சிறந்த திரைப்படம், நிகழ்ச்சி, ஹோட்டல் ஆகியவற்றை இந்தச் செயலி அளித்து வருகிறது.

இந்தியாவில் 69 சதவீதம் பேர் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவை செயலி மூலமே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளனர்.

இன் விடியோ: எழுத்துகள் மூலம் கட்டளையிட்டு செயற்கை நுண்ணறிவில் விடியோ உருவாக்க உதவும் இந்த இன் விடியோ செயலி சிறந்த தனிநபரின் வளர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.

லூமினார்: புகைப்படங்களை ஏ.ஐ. மூலம் எடிட் செய்ய உதவும் இந்தச் செயலி முதலிடம் பெற்றுள்ளது.

குட் நோட்ஸ்: பிடிஎஃப், டாக்குமென்ட்ஸ், நோட்ஸ் ஆகியவற்றை பெரிய திரையில் காண உதவும் இந்த செயலி தயாரிப்பு பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.

டூன்சூத்ரா: இந்திய புராணக் கதைகளை சினிமா பாணியில் காண உதவும் இந்தச் செயலி மறைந்திருக்கும் மாணிக்கம் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் செயலி வர்த்தகத்திலும், அடோப் ஃபய்ஃப்லை செயற்கை நுண்ணறிவு வரைகலையிலும் முதலிடம் பிடித்துள்ளன.

சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை நிகழாண்டு கூகுள் பிளே ஆண்ட்ராய்ட் மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com