பேல்பூரி

'ஏண்டா கல்யாணத்துக்குப் பின்னர் வெளியே சுத்த வர மாட்டேங்குறே...'
பேல்பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

(திண்டுக்கல் அருகே அமைந்துள்ள ஓர் ஊரின் பெயர்)

'சுள்ளெரும்பு'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

(நாகர்கோவில் மாவட்டத்துக்கு உள்பட்ட மார்த்தாண்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'கல்லடி மாமூடு'

-மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.

(திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணி அருகேயுள்ள ஊரின் பெயர்)

'ஆகாரம்'

-ந.சண்முகம், திருவண்ணாமலை.

கேட்டது

(விழுப்புரம் பேருந்து நிலையத்தில் நண்பர்கள் இருவர்)

'ஏண்டா கல்யாணத்துக்குப் பின்னர் வெளியே சுத்த வர மாட்டேங்குறே...'

'வீட்டு வேலையே சரியா இருக்குடா மச்சான்...'

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

(பழனி ரயில் நிலையத்தில் தாயும், மகனும் பேசியது)

'யம்மோவ்.. நான் ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுறேன்..'

'அடேய் பார்த்துடா.. அதுக்குள்ளே ஸ்பூன் போட்டிருக்கேன்...'

-எஸ்.வேல்அரவிந்த், திண்டுக்கல்.

(திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட காளனம்பட்டியில் இரு விவசாயிகள் பேசியது)

'பொங்கலுக்கு என்ன வாங்கினீங்க?'

'இந்த ஹோட்டலில் சட்னி, சாம்பார்தான் நல்லா இருக்கும். அதைத் தான் வாங்கினேன்..'

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

யோசிக்கிறாங்கப்பா!

நினைத்து வாழு.

நினைப்பில் வாழாதே!

-ஏ.பாரூக், தூத்துக்குடி.

மைக்ரோ கதை

ராமனிடம் கண்ணன் தனது சிறுவயது குறும்புகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

'என்னுடைய சிறுவயதில் என்னுடைய அம்மா இருபது ரூபாய் தந்து கடையில் ரொட்டி வாங்கி வரச்சொல்லுவார். நான் மூன்று ரொட்டிகள், இரண்டு ஜாம் பாட்டில்கள் , நான்கு வெண்ணெய் கட்டிகள் , மூன்று பால் பாக்கெட்டுகள் - இப்படி கைகள் கொள்ளாத அளவுக்கு பொருட்களை கடையில் இருந்து கொண்டு வருவேன். இப்ப ஒன்னும் செட் ஆகுறதில்லை' என்றான் கண்ணன்.

'என்னடா சொல்றே நீ ?' என்றான் ராமன்.

'ஆாண்டா, இப்ப கடையில எங்க பார்த்தாலும் காமெரா வச்சி தொலைச்சிட்டாங்களே' என்றான் கண்ணன்.

ராமனால் பதிலே பேச முடியவில்லை.

-அ.கௌரிசங்கர், வேளச்சேரி.

எஸ்எம்எஸ்

தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ,

அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

-ரமணன் ஏகாம்பரம், ராசிபுரம்.

அப்படீங்களா!

பயனாளர்களைத் தக்க வைத்து கொள்ள வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தொடர்ந்து புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

வாட்ஸ் ஆஃப் பயனாளிகள் பெரிதும் விரும்பும் 'ஸ்டேடஸ் அப்டேட்'டில் தங்களுக்கு பிடித்த பாட்டை இணைக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், விடியோக்களில் வாட்ஸ் ஆஃப் வழங்கும் இசையை இணைப்பதன் மூலம் அந்தப் புகைப்படம் 15 நொடி விடியோவாக மாறிவிடுகிறது.

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். என இரண்டிலும் இந்த புதிய சேவை அளிக்கப்பட்டுள்து. இதன் மூலம் பயன்பாட்டாளர்கள் தங்களின் உணர்வுகளை பிறருக்கு இசை மூலம் எடுத்துரைக்கலாம். இன்ஸ்டாகிராமில் இந்தச் சேவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது.

இதேபோல், புகைப்படங்கள், விடியோக்களை சாட்களில் எடிட் செய்யும்போது இணைக்க 30 விஷுவல் எபெக்ட்ஸ்களையும் வாட்ஸ் ஆஃப் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் ஆஃப்பில் ஸ்டிக்கர்களை உருவாக்கும் செயல்பாடு எளிதாக்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுத்தால் ஸ்டிக்கராக மாறும் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com