மனித மலை..!

நியூஸிலாந்தின் வடக்கு தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள தரானகி பகுதியில் மிக உயர்ந்த மலை உள்ளது.
மனித மலை..!
Updated on
1 min read

நியூஸிலாந்தின் வடக்கு தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள தரானகி பகுதியில் மிக உயர்ந்த மலை உள்ளது. 1770 ஜனவரி 11-இல் இந்த மலையை தாமஸ் குக் என்பவர் கண்டுபிடித்து, அதற்கு 'மௌண்ட் எக்மாண்ட்' என பெயரிட்டார். இந்த மலையின் சிறப்புகள்:

அற்புதமான உயரம், அதன் மேல் எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும் ஒரு தட்டையான பகுதி. இங்கு முதல் குடியேற்றம் 1838-இல் நிகழ்ந்தது. தாரனகி என்ற பெயர் மாவோரி இன மக்களின் மொழியிலிருந்து வந்தது. மாவோரி ஐவி பழங்குடினரின் மூதாதையரின் நினைவாக இந்தப் பெயரிடப்பட்டது. இதனை 'தாரா' எனவும் அழைத்தனர். இதன் பொருள் 'தாவரங்கள் இல்லாத பகுதி' என பொருள். ஒருகாலத்தில் எரிமலையாக இருந்தது.

1886-இல் இந்த பகுதியை ஆங்கிலேயர்கள் வருகை தந்து ஆக்கிரமித்து, மாவோரி மக்களைக் கொடுமைப்படுத்தி நிலங்களை பிடுங்கினர். பின்னர், தொல்லைகளையும் அளித்தனர்.

இந்த மலையை ஏறுபவர்கள் இருக்கிறார்கள். வானிலை மேலே ஏற ஏற மாறிக் கொண்டேயிருக்கும். இதனால் மலையேறி 80-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் தினறி இறந்துள்ளனர்.

நியூஸி லாந்து மக்களால், இந்த மலை இன்றும் ஆளப்பட்டு வருகிறது. இந்த மலையை, ஒரு மனிதன் போல ஒரு சட்ட பூர்வச் செயலற்ற நபர் என அறிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா?

மாவோரிகள் மீது ஏற்பட்ட கரிசனம் தான்.

ஆங்கிலேயர்களால் கொடுமைகளுக்கு ஆளான மாவோரி மக்களை கெளரவிக்கும் வகையில், மலைக்கு மனித அந்தஸ்தை, அரசு வழங்கியுள்ளது. இதுநாள் வரை 'மௌண்ட் எக்மாண்ட்' என அழைக்கப்பட்ட மலை இனி 'மௌண்ட் தாரனகி' என அழைக்கப்படுகிறது.

ஆனால் மாவோரி மக்களளோ பேச்சு வழக்கில் இதனை 'தாரனகி மெளங்கா' என்றே கூறுகின்றனர். இந்தப் பகுதியை இயற்கை புவியியல் அம்ச பூமி என நியூஸிலாந்து அரசு அழைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com