ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கோலிவுட்

பாலிவுட் நடிகைகளில் அதிகமானோர் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் வைத்திருக்கின்றனர்.

News image

VRR

Updated On :5 ஏப்ரல் 2026, 4:04 pm IST

காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் ரகுல் பிரீத் சிங்!

பாலிவுட் நடிகைகளில் அதிகமானோர் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் வைத்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தனது வீட்டில் வைத்திருக்கும் மாடித்தோட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

தனது நீண்ட நாளைய காதலன் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டுள்ள ரகுல் பிரீத் சிங், மும்பை பாந்த்ராவில் உள்ள 'பூஜா காசா' என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தக்கட்டடம் முழுக்க நடிகை ரகுல் பிரீத் சிங் குடும்பத்திற்குச் சொந்தமானது. இதில்தான் தற்போது தற்காலிகமாக நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்தோடு வாடகைக்கு வசித்து வருகிறார்.

ரகுல் பிரீத் சிங் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்காக மாடியில் மிகப்பெரிய அளவில் தோட்டமும், நீச்சல் குளமும் அமைத்துள்ளார். மாடிப்பகுதிக்குச் சென்றாலே ரிசார்ட்டுக்குச் சென்றது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. இந்தத் தோட்டத்தில் தக்காளி, பூசணி, பாகற்காய், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளைப் பயிரிடுகின்றனர்.

இதற்கு சந்தையில் விற்கப்படும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த உரம் பயோகேஸ் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் வீட்டிலேயே ஆர்கானிக் காய்கறிகளை வளர்க்க அத்துறையில் தொடர்புடைய நிபுணர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்று இதனை அமைத்திருக்கின்றனர்.

இந்த மாடித்தோட்டத்தில் இந்த பாலிவுட் தம்பதி தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் அமர்ந்து பேசுகின்றனர். அவர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்கின்றனர். அதோடு நீச்சல் குளத்திற்கு அருகில் அமர்ந்து உணவு உண்பதற்கும் வசதி செய்துள்ளனர்.

லீடர்

லீடர்

வெற்றிமாறன், தனுஷ் பாராட்டு - லெஜண்ட் சரவணன்!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'லீடர்'. அண்மையில் படம் திரைக்கு வந்துள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான லெஜண்ட் சரவணன் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும் போது, 'உலகெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில், மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். அப்பா, மகள் பாசப் பிணைப்புக்குள் ஒரு கேங்ஸ்டர் நுழையும்போது ஏற்படும் மாற்றங்களே இந்தப் படத்தின் கதை. இயக்குநர் துரை செந்தில்

குமார் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இந்தப் படத்தைச் செதுக்கியுள்ளார்.

படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், அரை மணி நேரம் போனில் பாராட்டியது மறக்க முடியாதது. படப் பாடல்கள் கதையோடு பயணிக்கும் வகையில் மிகச்சிறப்பாக வந்துள்ளன. ஜார்ஜியா ஏர்போர்ட்டில் -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் மரத்துப் போகும் சூழலில் 14 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுச் சண்டைக் கலைஞர்களுடன் குறுகலான ரயில் பெட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், ஆயிரக்கணக்கான டெக்னிஷியன்கள் காத்திருப்பதால், ஊசி போட்டுக்கொண்டு மீண்டும் நடித்தேன். அந்த எனர்ஜி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.

லால் சார் ஒரு ஜீனியஸ். அவருடன் நடித்தது சவாலாக இருந்தது. ஷ்யாம் தனது முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். இயக்குநர் செந்தில்

குமார் மனதில் நினைத்தபடியே ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு படத்துக்குப் பலம். விடிவி கணேஷ் காமெடியால் எங்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல டேக்குகள் சென்றன.

இந்தப் படத்தை அண்மையில் பார்த்த வெற்றிமாறன், தனுஷ் ஆகியோர் பிரமாண்டமாக இருப்பதாகப் பாராட்டினர். ஜெயிலர், விக்ரம், லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் 'லீடர்' படமும் ஓர் இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரு வசனம், 'கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை. நல்ல மனிதர்கள் மூலமாகவே செய்கிறார். அவர்களை நம்புங்கள். என்னையும் நம்புங்கள்.' இந்தக் கோடை விடுமுறையை 'லீடர்' படத்துடன் கொண்டாடுங்கள்.' என்றார்.

ரஜினி

ரஜினி

துரந்தர் 2 படத்துக்கு ரஜினி பாராட்டு!

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அர்ஜுன் ராம்பல் நடிப்பில் உருவான 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்திருந்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் - தி ரிவெஞ்ச்' திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியானது. படத்தின் மேக்கிங் அம்சத்துக்காகப் பாராட்டைப் பெற்றாலும், இப்படம் பேசும் கருத்துகளுக்காக விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, அவருடைய எக்ஸ் பக்கத்தில் படத்தைப் பாராட்டி ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், 'என்ன ஒரு படம்! பாக்ஸ் ஆபீஸ் கா பாப். ரன்வீர்சிங்குக்கும், மொத்த படக்குழுவுக்கும் என்னுடைய பாராட்டுகள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்!' எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு ரீட்வீட் செய்து இயக்குநர் ஆதித்யா தர், 'நாங்கள் வளர்ந்த காலத்தில் பொழுதுபோக்கு

என்றால், அது நீங்கள் தான்! பல தசாப்தங்களாக எங்களை விசில் அடிக்க வைத்து, சிரிக்க வைத்து, அழ வைத்தவர் நீங்கள். இன்றும் அதே ஸ்வாக் உடனும், அழகிய கிரேஸூடனும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். இது மாயாஜாலம் தான். நீங்கள் 'துரந்தர் 2' படத்தை 'மஸ்ட் வாட்ச்' என்று அழைப்பது, என் வாழ்க்கையின் மிகப் பெரிய 'சூப்பர் ஸ்டார்' தருணமாக உணர்கிறேன். இது, நம் அனைவரையும் பெரிய கனவுகளை காணக் கற்றுத் தந்த அந்த மனிதரிடமிருந்தே கிடைத்த ஆசிர்வாதம் போல் இருக்கிறது. ஜெய் ஹிந்த்!' எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.